மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

3-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

11.சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.I சாமுவேல் 1:11 NKJV

தேவனாகிய கடவுள்,சேனைகளின் கர்த்தர் என்று வேதத்தில் முதல் வெளிப்பாட்டைப் பெற்றவர் அன்னாள்.அவள் மனுமுடைந்து மிகவும் துயரமான நிலையில் இருந்தபோது அவளுக்கு இந்த வெளிப்பாடு வந்தது.

அவள் பிரார்த்தனை செய்தும் எந்த பலனும் இல்லாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்,அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
பொதுவாக ஒரு பெண் மலடியாக இருப்பது என்பது வேதனையான காரியம்.ஆனால், மலடியாக இருக்கும் பொழுது அந்த பெண் சமூகத்தால் இழிவுபடுத்தும் போது அது முற்றிலும் மாறுபட்ட விஷயம்.
இது உண்மையிலேயே மனதை வாட்டும் மற்றும் ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது! ஒரு பக்கம் நீங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறீர்கள்,அவமானம் மற்றும் கேலிக்கு ஆளாகிறீர்கள்,மறுபுறம் உங்கள் ஜெபங்கள் தேவனின் கவனத்தைக் ஈர்க்கவில்லை.தேவன் உங்களை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இது உண்மையில் வேதனையான நேரம்!!

இந்த ஆத்திரமூட்டும் நேரத்தில், கண்ணீருடனும் உதவியற்ற நிலையிலும் அவள் தனது போர்களை சேனைகளின் கர்த்தர் ஏற்று அவளுக்காக எதிர்த்துப் போராட அழைக்கிறாள். சேனைகளின் கர்த்தர், மகிமையின் ராஜா அவளுடைய துன்பத்தைப் பார்த்து, “குணமாக்க முடியாமல் மூடிய கருப்பை” மீதான சாபத்தை ரத்து செய்தார்.

என் அன்பானவர்களே,நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மிகுதியினால், நீங்கள் ஜெபங்களை விட்டு விலகவும்,இயேசுவை விட்டு விலகவும் ,அவருடைய திருச்சபையை விட்டு விலகவும் தூண்டப்படுகிறீர்களா?கலங்காதிருங்கள், சேனைகளின் கர்த்தர் உங்கள் பக்கம் இருக்கிறார் என்பதை இன்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

அவர் உங்கள் துன்பத்தைப் பார்க்கிறார். மீளமுடியாததாகத் தோன்றும் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை அவர் திரும்பக் கொடுக்கிறார். அன்னாள் செய்தபடியே சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடுங்கள். சேனைகளின் கர்த்தர் உங்கள் போர்களை தாம் ஏற்று போராடுகிறார். ஆகையால், கர்த்தருடைய இரட்சிப்பை அமைதியாக உட்கார்ந்து அனுபவியுங்கள். இந்த யுத்தம் சேனைகளின் கர்த்தருடையது என்றும், வெற்றி உங்களுடையது என்றும் இயேசுவின் நாமத்தில் அறிவிக்கிறேன்! உங்கள் துக்கம் மிகுந்த சந்தோஷமாக மாறும்! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *