மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

10-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

6. நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
7. உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
8. நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகாய் 1:6-8 NKJV

நாம் விரும்பும் வழியில் விஷயங்கள் நடக்காதபோது,நாம் அடிக்கடி தேவனைக் கேள்வி கேட்கிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் அதிகம் உழைக்கவில்லையா?
என் அன்பானவர்களே,என் வாழ்க்கையில் நான் எதை முதன்மைப்படுத்தினேன் என்பதுதான் கேள்வி.

மனித முயற்சிகள் மிகக் குறைவாகவும், தெய்வீக பலன்கள் அதிகபட்சமாகவும் இருக்கும் இடத்தில் இருப்பது தான் தேவனுடைய ராஜ்யம். சேனைகளின் கர்த்தரைப் பற்றிய புதிய புரிதலையும் வெளிப்பாடாக ஆகாய் தீர்க்கதரிசி பெறுகிறார். அந்த ராஜ்ஜியம்அவருடைய கிருபையின் பேரில் செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். ஆனால், அதேசமயம் அதிக முயற்சிகள் இருந்தும் குறைவான விளைச்சல் பெறுவது மற்றும்,நன்றாகச் சம்பாதித்தாலும் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் போவதும், நன்றாகச் சேமித்து வைத்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு சேமிப்பைக் குறைப்பதும் போன்றவை ராஜ்ய கிருபைக்கு முரணானவை ஆகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்படி அறிவுறுத்தினார். அதனால் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நமக்கு கூட கொடுக்கப்படும். “உமது ராஜ்யம் வருவதாக” என்ற உணர்வு மிகவும் முக்கியமானது.
இரண்டாவதாக, ஆகாய் தீர்க்கதரிசி, கல்வாரி மலைக்குச் சென்று,மரமாகிய சிலுவை மரத்தின் பலனைக் கொண்டு தேவாலயத்தைக்கட்ட அறிவுறுத்துகிறார். ஏனென்றால், சிலுவையில் தான் நாம் முழுமையாக மன்னிக்கப்பட்டு, என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு என்றென்றும் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டோம்.

ஆம் என் அன்பானவர்களே, இயேசுவின் செயல்களை விசுவாசிப்பதே ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது மாறாக என் கீழ்ப்படிதல்/கடின உழைப்பு அல்ல.
இயேசு, செய்து முடித்த தியாகத்தில் இளைப்பாருவதே அவருடைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
நான் உழைத்து ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதல்ல. இயேசு செய்த தியாகத்தால் தான் தேவன் என்னை ஆசீர்வதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
கல்வாரி சிலுவையில் அவர் எனக்காக என்ன செய்தார் என்பதை நான் விசுவாசித்து,என் வாழ்க்கையில் ஆசீர்வதிகப்படுகிறேன். அல்லேலூயா!

நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்று ஒப்புக்கொள்கிறேன் அதனால் அவருடைய கிருபையைப் பெறுகிறேன் (அதனால் குறைந்த முயற்சி ஆனால் அதிகபட்ச முடிவுகள்).

என் முயற்சிகள் என்பது விசுவாசிப்பது, ஒப்புக்கொள்வது மற்றும் பெற்றுக்கொள்வதே ஆகும்.
இலவசமாகப் பெறுகிறேன், இலவசமாகக் கொடுக்கிறேன்’ என்பது மட்டுமே எனது முயற்சி. நான் தேவனின் கிருபையை இறுதியாக பெறுபவன் அல்ல, மாறாக நான் இறுதிக்கான வழி. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *