03-06-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!
8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்துதல் 3:8 NKJV
அல்லேலூயா! இது நற்செய்தி!! நம்முடைய நீதியான இயேசுவே உங்களுக்கு முன்பாகச் சென்று பெரிய வாய்ப்புகளின் திறந்த வாசலை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார்!!!
இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால், அதை மூட யாருக்கும் அதிகாரம் இல்லை – முற்றிலும் யாருக்கும் இல்லை – எந்த மனிதனும் , தீய சக்தியும் ,கண்ணுக்கு தெரியாத சக்தியும் ,எந்த அரசாங்கமும்,எந்த அதிகாரமும் ,எந்த சூழ்நிலையும் ,கடந்த காலமும் ,கடந்த காலத்தின் இழந்த வாய்ப்புகளும் .நிகழ்காலமும் அல்லது எதிர்காலமும் கூட அந்த வாசலை மூட முடியாது.
ஆம் என் அன்பானவர்களே ! இது இந்த ஜூன் மாதத்தில் தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியாகும். கடந்த காலத்தில் நீங்கள் தோல்வியுற்றிருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ உங்களை ஏமாற்றியிருக்கலாம், நீங்கள் பிரார்த்தனை செய்து எந்த பலனும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த மாதத்தில், கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சென்று, ஒரு பெரிய வாய்ப்புக்கான கதவை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார் – ஒரு வணிக வாய்பாகவோ, ஒரு தொழில் வாய்ப்பாகவோ அல்லது வேறு எந்த வாய்ப்பாகவோ அந்த வாய்ப்பு உங்கள் மற்ற எல்லா தேவைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றும் . அல்லேலூயா! ஆமென் 🙏
அன்பானவர்களே உங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளும் ஓய்ந்துவிடும் மற்றும் ,ஒவ்வொரு புயலும் அமைதியடையும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள இந்த திறந்த வாசல் வழியாக உங்களை அழைத்துச் செல்ல தேவதூதர்கள் உதவுவார்கள் என்று இந்த நாளில் விசுவாசமாக நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்!