மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, என்றென்றும் ஆட்சி செய்ய நீதியின்படி விடுதலையைப் பெறுங்கள்!

10-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, என்றென்றும் ஆட்சி செய்ய நீதியின்படி விடுதலையைப் பெறுங்கள்!

16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. (ரோமர் 1-16,17)

நற்செய்தி அறிவிப்பதைப் பற்றி அவர் வெட்கப்படவில்லை என்று பவுல் கூகிறார்!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் எக்காலத்திற்கும் தேவனின் நற்செய்தியாகும்.

இது அப்படி என்ன பெரிய நல்ல செய்தி? இந்த நற்செய்தி, தேவன் தம் பார்வையில் நம்மை எவ்வாறு நீதிமான்களாக்கினார் என்பதை நமக்குச் சொல்கிறது.

இது எப்படி நிறைவேற்றப்பட்டது?
கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் வேதனையான தருணங்கள் தொடங்கியதிலிருந்தே,கேலி செய்யப்பட்டார், மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டார், அவரது முதுகு வாரினால் உழப்பட்டது, அவரது தசைகள் துண்டாக்கப்பட்டன, அவர் ஏளனமாக முட்களால் முடிசூட்டப்பட்டார், கேலி செய்யப்பட்டு, துப்பப்பட்டார், அவர் கோர சிலுவையை சுமந்தார். சிலுவையில் அறையப்பட்டு, அதே சிலுவையில் கொடூரமான மரணம் அடைந்து அடக்கம் செய்யப்பட்டார். அது அங்கு முடிவடையவில்லை, தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அது ஒவ்வொரு பாவம், நோய், சாபம், மரணம், பிசாசு மற்றும் அவரது கூட்டாளிகளை என்றென்றுமாக அவமானதிற்குள்ளாக்கியது, நம்மை நீதிமான்களாக்கியது.

மனிதன் என்றென்றுமாக விடுவிக்கப்பட்டான்.குற்ற உணர்வு,அவமானம் மற்றும் மரணத்தை உண்டாக்கும் பாவங்கள், அவனுக்கு எதிராக ஒருபோதும் இருக்க முடியாது. ஆண்டவர் இயேசுவின் தியாகத்தால் மனிதன் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, நியாயமான முறையில் என்றென்றும் நீதிமானாக ஆக்கப்படுகிறான். இது தான் நற்செய்தி!அல்லேலூயா!!

சிலுவையில், இயேசு நாம் செய்த மற்றும் செய்யப்போகும் அனைத்து பாவங்களுக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டார். நம்முடைய ஒவ்வொரு பாவத்திற்கும் அவரே பொறுப்பேற்க முடிவு செய்தார், மேலும் ஒவ்வொரு பாவத்திற்கும் தண்டனையும் பெற்றார். அவர் செய்த இந்த தியாகமே எங்களை நீதிமான்களாக்கியது.

அவருடைய உயிர்த்தெழுதலில், அவருடைய பாவமற்ற கீழ்ப்படிதலின் காரணமாக அவருக்கு வர வேண்டிய ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு அறிவித்தார். அது ஒருபோதும் திரும்ப பெறமுடியாத வரம். மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட வரம். அவருடைய ஆசீர்வாதத்தின் இந்த அறிவிப்பு இப்போது உங்கள் மீதும் என் மீதும் தங்கியுள்ளது. இது அவர் நீதியின் விளைவாகும்.

என் அன்பானவர்களே! இந்த அற்புதமான நற்செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா?தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
அப்படியென்றால், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் தேவனுடைய நீதியுள்ளவர்கள் என்று அறிவிக்க நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்!?
ஆம்,கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியே தேவனுக்கு முன்பாக நம்முடைய நிலைப்பாடு மற்றும் தரம்.ஆம் இதை நம்புவதற்கு மிகவும் நல்லது!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆட்சி செய்ய நியாயமான விடுதலையைப் பெறுங்கள்.

நம்முடையநீதியானஇயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4  ×  1  =