25-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியை இன்றே பெறுங்கள்!
5.இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி:இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
7.பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.யோவான்-6:5-7
என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நாம் இருப்பதால், “உமது ராஜ்ஜியம் வருவதாக” என்ற நம் ஜெபத்தின் வல்லமையை அற்புதமான மற்றும் விவரிக்க முடியாத விதத்தில் பார்க்கப் போகிறோம்!
ஆண்டவராகிய இயேசு சென்ற இடமெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசுவதைக் கேட்க திரளான மக்கள் கூடினர். சில சந்தர்ப்பங்களில் நகரங்களிலிருந்து மக்கள் இயேசுவைக் கேட்க நகரங்களிலிருந்து மக்கள் வனாந்திரமான இடத்தில் கூடினர் (மாற்கு 6:35). அப்படிப்பட்ட இடத்தில்
உணவை வாங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை.
திரளான ஜனங்களுக்கு உணவளிக்க எங்கு உணவு வாங்கலாம் என்று கர்த்தராகிய இயேசு பிலிப்புவிடம் கேட்டார். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை வனாந்திரத்தில் போஷிப்பது என்பது பிலிப்புவுக்கு பெரும் பிரச்சனையாக தோன்றியது.ஆனால்,கர்த்தர் பிலிப்புவைச் சோதித்தார்,ஏனென்றால் திரளான ஜனகூட்டத்தை எப்படி போஷிப்போம் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.
என் அன்பானவர்களே, உங்கள் தேவையின் பரந்த தன்மையை நீங்கள் பார்ப்பதற்கு முன்பே, கர்த்தராகிய இயேசு நீங்கள் பார்ப்பதற்கு முன்பே தேவையைப் பார்த்திருக்கிறார், மேலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார். அல்லேலூயா!..
இந்த வாரம் என் நண்பர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் உள்ள மாபெரும் தேவையை சந்திக்ககூடும்:அது ஒருவேளை திருப்பிச் செலுத்தவேண்டிய ஒரு பெரிய கடனாக இருக்கலாம்,செலுத்த வேண்டிய அதிகப்படியான கட்டணமாக இருக்கலாம்,வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு அல்லது அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவிட்டதாகத் தோன்றும் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். விசுவாசத்தும் மேற்கொள்ளமுடியாத ஒரு பெரிய வியாதியாக இருக்கலாம். மகிழ்ந்து களிகூருங்கள் !மகிமையின் ராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியும். அவருடைய ராஜ்யம் உங்கள் மீது வரும்போது உங்கள் தேவைக்கு அதிகமான ஆசீர்வாதங்களையும் எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி உங்களுக்கு அபரிவிதமாக வழங்குவார். அவருடைய ராஜ்யம் வருவதாக! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியை
இன்றே பெறுங்கள்!
பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!