Author: vijay paul

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்!

12-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்!

24. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.யாத்திராகமம் 2:24-25 NKJV

தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டார், தேவன் தனது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார், தேவன் தம் பிள்ளைகளின் வேதனைகளைப் பார்த்த்து அவகைளை தீர்க்கும்படியாக அவர்களை அங்கீகரித்தார். (அவர்களின் அழுகைக்கு பதிலளித்தார்)!

எல்லா கண்டங்களிலிருந்தும் எல்லா நம்பிக்கைகளிலிருந்தும் பரலோகத்தில் உள்ள சர்வவல்லமையுள்ள தேவனிடம் மக்களின் வேதனையான கூக்குரல்கள் வருகின்றன.ஆனால், மனிதனுடனான தேவன் செய்த (இரத்த )உடன்படிக்கையை நினைவுகூரச் செய்யும் பெருமூச்சானது மனிதனைப் பார்க்கவும் அவனுக்கு விரைவாக பதிலளிக்கவும் தேவனுடைய கவனத்தை ஈர்க்கிறது.

என் அன்பானவர்களே, இது ஒரு அற்புதமான உண்மை மற்றும் இந்த உண்மையைப் புரிந்துகொள்வது ஒருவரின் ஜெப வாழ்க்கையில் முற்றிலும் மாற்ற்று கிறது,உடனடி பதில்களைப் பெறுகிறது!
வனாந்தரத்தில் ஆகார் மற்றும் அவளது மகன் இஸ்மவேலின் வாழ்க்கையிலிருந்து ஒரு எளிய உதாரணத்தை தருகிறேன். அவர்கள் தவறான நடத்தைக்காக ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர், அவர்கள் பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவித்து ஓடினர்,மேலும் ஆகாரால் தனது மகனின் மரணத்தைப் பார்க்க முடியவில்லை.அவள் கசப்புடன் அழுதாள் மற்றும் வேதனையால் அழுதாள், அவள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அழுதாள்.அப்பொழுது,இறக்கும் இளைஞனின் அழுகையை தேவன் கேட்டார் என்று வேதம் கூறுகிறது (ஆதியாகமம் 21:17).என் கற்பனைக்கு எட்டிய வரையில், இறக்கும் தருவாயில் இருந்த இளைஞனின் அழுகை ஒரு உள்ளான குமுறலாகவும் வேதனையை உள்ளடக்கிய கண்ணீராக இருந்திருக்கும்.ஆனால்,தேவன் இறக்கும் இளைஞனின் அந்த குமுறலைகூட கேட்டார்!

என் அன்பானவர்களே, தேவனுக்கு முக்கியமானது சத்தத்தின் தீவிரமோ அல்லது நபரின் அழுகையின் விரக்தியோ அல்ல, மாறாக அவருக்கு முக்கியமானது அவர் மனிதனுடன் செய்த இரத்த உடன்படிக்கையில் இருந்து வருகிற சத்தமே ஆகும். தேவன் ஆபிரகாமுடன் ஒரு இரத்த உடன்படிக்கை செய்தார், மேலும் அவர் ஆபிரகாமின் மகன் இஸ்மவேலையும் ஆசீர்வதிப்பார் என்று ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 17:20). இதுவே சிறுவனின் முனகலை தேவனுடைய சிம்மாசனத்தை அடையச் செய்தது!

ஆம் என் அன்பானவர்களே, தேவன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நித்திய உடன்படிக்கை செய்துள்ளார்.இந்த உடன்படிக்கை அவருடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள எவரும் மிகவும் கிருபை பெற்றவர்கள் (HIGHLY FAVOURED) மற்றும் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (GREATELY BLESSED)!

ஆகவே, இயேசுவின் இரத்தத்தின் மூலம் சாதி, மதம், கலாச்சாரம், நிறம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனிடம் வரும் எவரும் நிச்சயமாக தேவனின் உடனடி கவனத்தையும் அவர்களின் ஜெபங்களுக்கு விரைவான பதிலையும் பெறுவார்கள்! ஆமென் 🙏

இயேசு தம் இரத்தத்தால் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் (ரோமர் 5:9) மேலும் கிறிஸ்துவில் உங்கள் நீதியின் விசுவாச அறிக்கையானது ஒவ்வொரு நுகத்தையும் உடைத்து, பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் எதிரிக்கு விரோதமாக படையெடுக்க அழைக்கிறது,ஆகவே இன்றும் உங்கள் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஆளுகை செய்யவைக்கிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை(பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் தடைகள் தகர்வதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

11-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் தடைகள் தகர்வதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.லூக்கா 15:16-18 NKJV.

ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்,மனிதர்கள் அழுவதற்கு நான்கு காரணங்கள் உள்ளன என்று அறியப்பட்டது: பசி, வலி, நோய் மற்றும் ஆபத்தின் அழுகை என்பதாகும்.

தந்தையிடமிருந்து பிரிந்த ஊதாரி மகன், கவலையற்ற வாழ்கை நிலையில் இருக்கத் தொடங்கினான், காலப்போக்கில், அவனிடம் எதுவும் மிஞ்சவும் இல்லை, உதவ யாரும் இல்லை. பசியின் கொடுமை விரைவில் தன்னை கல்லறைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தான். அவன் தனது தந்தையின் ஆடம்பரமான மற்றும் நிபந்தனையற்ற அன்பை நினைவு கூர்ந்தான், மேலும் அவன் அழியக்கூடாது என்பதற்காக தனது தந்தையிடம் திரும்ப முடிவு செய்தான். பசியின் அழுகை,வலி ​​மற்றும் ஆபத்தான விளைவுகள் அவனை அவனது தந்தையிடம் திரும்ப அழைத்துச் சென்றன.
இரக்கமுள்ள தந்தை கொழுத்த கன்றுக்குட்டியை வெளியே கொண்டு வந்து கொன்று தன் மகன் திரும்பியதற்காக நண்பர்களோடு கொண்டாடினார். (லூக்கா 15:23,27,30)!

இன்றும் என் அன்பானவர்களே அது உங்கள் வாழ்விலும் சாத்தியமாகும்!எந்த வடிவத்தின் பசியினாலும், எந்த ஒரு வேதனையான காரணத்தினாலும், எந்த விதமான நோயினாலும், எந்த பிரச்சனையினாலும் பயமுறுத்தும் அச்சம் அல்லது அவமானத்தால் உங்கள் வேதனை, பிதாவின் சிம்மாசனத்தை அடைகிறது. ஏனென்றால் கர்த்தராகிய இயேசு, எங்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் தேவனின் இரகத்திற்காக கதறிய அழுகை நமது கண்ணீரோடு ஒன்றாகக் கலந்து, தேவனின் செவிகளை எட்டுகிறது. எனவே, உங்கள் பிரார்த்தனைகள் உடனடியாகப் பதிலளிக்கப்படுகின்றன!

இந்த நாளில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு திடீரென்று தடைகள் தகர்க்கும் சூழ்நிலையை அனுபவிக்கச் செய்கிறார்!ஆரோக்கியம், செல்வம், பாதுகாப்பு மற்றும் மிகுந்த மன அழுத்தத்தையும் வலியையும் ஏற்படுத்தும் பகுதிகளில் இயேசுவின் நாமத்தில் விடுதலை பெறுகிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் தடைகள் தகர்வதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை(பு) நற்செய்தி பேராலயம்!!

g181

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் குமுறலின் சத்தம் அவருடைய சிம்மாசனத்தை அடைவதின் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

10-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் குமுறலின் சத்தம் அவருடைய சிம்மாசனத்தை அடைவதின் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

15.அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல,என் ஆண்டவனே,நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ;நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை;நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
17.அதற்கு ஏலி சமாதானத்துடனே போ;நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
18.அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய்,போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. I சாமுவேல்1:15,17-18 NKJV.

அன்னாள் மலடியாக இருந்தாள்,குழந்தை இல்லாத சமூக அழுத்தம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.பொறாமை கொண்ட அனைவராலும் அவள் கேலி செய்யப்பட்டாள். பல ஆண்டுகளாக அவள் துயரத்திலும் விரக்தியிலும் இருந்தாள்,ஆத்துமாவின் கசப்பினால் வேதனையடைந்து காணப்பட்டாள்.

அன்னாள்,அவள் தேவனிடம் பிரார்த்தனையில் தன் ஆத்துமாவை ஊற்றி அழுதாள்,அவளுடைய முனகல் தேவனின் சிம்மாசனத்தை அடைந்தது.அவளுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தேவன் தம்முடைய ஆசாரியரான ஏலி மூலம் பேசினார்*மீதமுள்ளது வரலாறு.அவள் இஸ்ரவேலின் வலிமைமிக்க தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் பெற்றெடுத்தாள்,அவனுக்கு சாமுவேல் என்று பெயரிடப்பட்டது.சாமுவேல் என்ற இந்த மனிதர் பிற்காலத்தில் தாவீது ராஜாவை அபிஷேகம் செய்தான்,அவன் மூலமாக உலக இரட்சகராகிய கிறிஸ்துவும் வந்தார்.

ஆம் என் அன்பானவர்களே,அன்னாளின் முனகலும் பிரார்த்தனையும் அவளின் தலைவிதியை மட்டுமல்ல, முழு உலகத்தின் தலைவிதியையும் மாற்றியது. அவளுடைய எதிரிகள் அவள் மீது பொறாமைப்படுவதில் ஆச்சரியமில்லை.
இந்த உண்மையை நீங்கள் உணராவிட்டாலும்,தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதையும், நீங்கள் மிகவும் விரும்பப்படுகிறீர்கள் என்பதையும் அவர் அறிந்திருப்பதால்,உங்கள் எதிரி உங்களைப் பொறாமைப்படுத்தி உங்களைத் தாக்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள. நீங்கள் இலக்கின்றி அலைந்து திரியலாம்,கடித்துக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருக்கலாம்,ஒருவேளை பல ஆண்டுகளாக தேவனிடம் கண்ணீர் சிந்தலாம்.
ஆனால், தேவன் உண்மையுள்ளவர்:அவர் இந்த ஆண்டுகளைக் கணக்கிட்டு,உங்கள் கண்ணீரையெல்லாம் அவருடைய கணக்கில் சேமித்து வைக்கிறார். (சங்கீதம் 56:8).

இது உங்கள் நாள்! தேவன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் நாள், துயரத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. உங்கள் அழுகை இயேசுவின் இரத்தத்தின் அழுகையுடன் கலந்து அவருடைய சிம்மாசனத்தை அடைந்தது. இன்று உங்கள் விடுதலையை நீங்கள் காண்பீர்கள்! தேவன் உங்களுக்கு தயவு பாராட்டும் நேரம் (நன்மையின்நேரம்) வந்துவிட்டது. உற்சாகமாக அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை செலுத்தி ஆளுகை செய்யுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் குமுறலின் சத்தம் அவருடைய சிம்மாசனத்தை அடைவதின் மூலம் ஆட்சி செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

skky

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் திடிரென்று தடைகள் அகன்று முன்னேற்றத்தை அனுபவியுங்கள்!

09-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் திடிரென்று தடைகள் அகன்று முன்னேற்றத்தை அனுபவியுங்கள்!

23. சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:23-25 ​​NKJV

இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியர்களால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் அடிமைத்தனத்திற்கு அல்லது கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்க வழியின்றி பரிதாபமாக திண்டாடினர், அப்பொழுது அவர்கள் மீதான கொடுமை மிகவும் கடுமையானதாகவும் அதை தேவன் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர்.அது இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லாத சூழ்நிலையாகிவிடும் என்று தேவனிடம் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் கூக்குரலிட்டார்கள்.

மேலும் அவர்களின் கூக்குரல் தேவனின் சிம்மாசனத்தை அடைந்தது மற்றும் அதன் விளைவாக 1. தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டார்; 2. தேவன் அவர்களுடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; 3. தேவன் இஸ்ரவேல் புத்திரரை இரக்கத்துடன் பார்த்தார், 4. தேவன் அவர்களை அங்கீகரித்தார். அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் மிருகத்தனமான அடிமைத்தனத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக விடுவிக்க அவர் கீழே இறங்கினார்.
தேவன் மனிதகுலத்துடனான தொடர்புகளில் எப்போதும் கரிசனையோடே இருந்தார்.இயேசு மனித உருவில் பூமியில் வாழ்ந்தபோது,திரளான மக்கள் சுகத்திற்காகவும் மற்றும் ஆறுதலுக்காகவும் தேடுபவர்களை அரவணைப்போடு கட்டித்தழுவினார்.மேலும் அவர் இருதயம் நொறுங்குண்டவர்கள் மீது மிகுந்த இரக்கத்துடன் காணப்பட்டு எந்தவொரு நிபந்தனை இல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் குணப்படுத்தினார். (மத்தேயு 14:14).
ஆம் என் அன்பானவர்களே, இந்த நாளில் உங்களது விரக்தியான சூழிநிலைகள் மேலும் நீங்கள் அனுபவிக்கும் வேதனையான வலி,ஆகியவற்றிற்கு எந்த பரிகாரமும் இருப்பதாகத் தெரியாத நிலையில்,இயேசுவே உங்கள் தீர்வாக மாறுகிறார்.சிந்தப்பட்ட அவருடைய இரத்தம் எப்போதும் உங்கள் சார்பாக தேவனிடம் கூக்குரலிடுகிறது.
இதில் உண்மை என்னவென்றால், உங்கள் வேதனையான வலியிலிருந்து வெளியேறும் உங்கள் அழுகை, பரலோகத்தில் தேவ பிரசன்னத்தில் இயேசுவின் இரத்தத்தின் அழுகையுடன் கலந்து, நித்திய ஆவியின் மூலம் உரத்த சத்தமாகவும் எதிரொலிக்கிறது, உடனே தேவன் அந்த கூக்குரலைக் கேட்கிறார்.அவர் இயேசுவுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூறுகிறார். தேவன் இரக்கத்தால் தூண்டப்பட்டு உடனடியாக பதிலளிக்கிறார்.அல்லேலூயா!

என் அன்பானவர்களே, இன்று உங்களது வாழ்வில் திருப்புமுனை உண்டாக்கும் நாள்! உங்கள் துக்கங்கள் மகிழ்ச்சியாக மாறிகிறது!! உங்கள் சுகம் திடீரென்று வெளிப்படுகிறது !!!அழுது புலம்புகிற நீங்கள் , இனிமேல் கிறிஸ்து இயேசுவோடு சேர்ந்து சிங்காசனத்தில் அமர்ந்து ஆளுகை செய்வீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் திடிரென்று தடைகள் அகன்று முன்னேற்றத்தை அனுபவியுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவியுங்கள்!

06-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவியுங்கள்!

24.புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.எபிரெயர் 12:24 NKJV‬‬.

கர்த்தராகிய இயேசு மற்றும் ஆபேல் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் இரத்தம் தரையில் சிந்தப்பட்டது.யாருடைய இரத்தமும் அநியாயமாக சிந்தப்படும் தருணத்தில்,நீதிக்காக தேவனிடம் சிந்தப்பட்ட இரத்தத்திலிருந்து ஒரு கூக்குரல் வெளிப்படுகிறது.

ஆபேல் அவனது சகோதரன் காயீனால் அநியாயமாகக் கொல்லப்பட்டான், அதேபோல கர்த்தராகிய இயேசுவும் அவருடைய சொந்த நாட்டினரால் (புறஜாதிகள் மூலம்) அநியாயமாகக் கொல்லப்பட்டார்.

இருப்பினும், இந்த இருவரின் இரத்தம் அநியாயமான நபரையும் அவர்களின் கொடூரமான செயலையும் வித்தியாசமாகப் பார்த்தது.:ஆபேலின் இரத்தம் பாவியின் செயலைக் கண்டது, அதேசமயம் கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் பாவியின் பாவத்தைக் கண்டு அந்த பாவத்தைத் தண்டியாமலிருக்க தேவனிடம் மன்றாடியது. பாவியின் பாவத்தின்நிமித்தம் அவரது சொந்த உயிரை தியாகம் செய்து பிதாவிடம் இரக்கம் மற்றும் மன்னிப்பு கோருவதன் மூலம் பாவியை விடுவித்தார்.
ஆம்! நாம் பாவிகளாய் இருக்கும்போதே கிறிஸ்து தேவபக்தியற்றவர்களுக்காக மரித்தார் என்பது எவ்வளவு பெரிய தேவனின் அன்பு!! மனிதனை நீதிமான்களாக்க இது தேவனின் பார்வையில் சரியாக தோன்றியது!இதுவே தேவ நீதி!

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் பாவ சுபாவம் இயேசுவின் உடலில் தண்டிக்கப்பட்டது.ஆகையால் பாவ சுபாவத்திலிருந்து வெளிப்படும் உங்கள் செயல்கள் அனைத்தும் தொடர்ந்து மற்றும் என்றென்றும் மன்னிக்கப்படுகின்றன.ஏனென்றால்,இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் இயேசுவின் இரத்தத்தின் கூக்குரல் நித்திய ஆவியின் மூலம் தொடர்ந்து என்றென்றும் உங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, உங்கள் வாழ்வில் குறிப்பாக உடல்நலம், செல்வம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முன்னேற்றங்கள் என்பது அதிக நிச்சயமாமே! இன்று, இயேசுவின் நாமத்தில் உங்கள் அற்புதம் மற்றும் தடைகள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவியுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

img_130

தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

05-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

14.நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரெயர் 9:14 NKJV‬‬.

தேவனுக்கு உண்மையான சேவை கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும்!
ஒவ்வொரு முறையும் நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு தேவனிடம் வரும்போது, ​​தேவன் என் ஜெபங்களுக்கு உடனடியாக பதிலளிக்கிறார்!
ஏனென்றால், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, ​​இயேசுவின் ஒவ்வொரு அணுவும் இரக்கம் மற்றும் மன்னிப்புக்காக கதறியது. அவர், “அப்பா, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்கா 23:34) என்று சத்தமிட்டார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் இன்றும் மக்களை எவ்வாறு சுத்தப்படுத்துகிறது என்ற கேள்வி உண்மையாய் தேவனைத் தேடுபவர்களுக்கு இருக்கிறது?
ஏனெனில், கிறிஸ்துவின் இரத்தம் நித்திய ஆவியின் மூலம் தேவனுக்குச் செலுத்தப்பட்டது,ஆகவே அது இன்றும் செயல்படுகிறது. நித்தியம் என்பது நேரத்தை உள்ளடக்கியது.நேரம் என்பது நித்தியத்தின் துணைக்குழு. ஆகையால், கிறிஸ்துவின் இரத்தம் தேவனின் நித்திய ஆவியின் காரணமாக ஒரு கட்டத்தில் சிந்தப்பட்டாலும் இன்றும் அது ஒரு நபரை சுத்தப்படுத்த முடியும். நித்திய ஆவியானவர், ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தின் பலனை நித்தியமாக்கினார்! அல்லேலூயா!!

நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது,அவருடைய இரத்தம் உங்களை முழுமையாகக் கழுவுகிறது, மேலும் கிறிஸ்துவின் இரத்தம் நித்திய ஆவியைக் கொண்டிருப்பதால்,நித்தியம் உங்களில் உள்ளது, நீங்கள் இன்று நேர மண்டலத்தில் வாழ்ந்தாலும்,நித்தியம் உங்கள் மூலம் செயல்படுகிறது.இதன் விளைவாக,நீங்கள் திருப்பி எடுக்க முடியாத ஆசீர்வாதங்கள் பெறுகிறிர்கள்! நீங்கள் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு சாபத்திலிருந்தும் நித்தியமாக மீட்கப்பட்டீர்கள்! நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்!

என் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக தேவனுக்கு உரத்த துதிகளைப் பாடுங்கள், அப்பொழுது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தடைகள் தகர்த்தெறியப்படுவதை நீங்கள் காண்பீர்கள்! ஏனெனில் நித்திய ஆவியானவர் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் செயல்படுகிறார். ஆமென் 🙏

தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் பூமியில் ராஜக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யுங்கள்!

04-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் பூமியில் ராஜக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யுங்கள்!

“விசுவாசத்தினாலே ஆபேல் காயீனைக் காட்டிலும் சிறந்த பலியை தேவனுக்குச் செலுத்தினான், அதன் மூலம் அவன் நீதியுள்ளவன் என்று சாட்சியைப் பெற்றான், தேவன் அவனுடைய பரிசுகளுக்குச் சாட்சி கொடுத்தார்; அதன் மூலம் அவர் இறந்துவிட்டாலும் பேசுகிறார்.எபிரெயர் 11:4 NKJV

காயீனின் காணிக்கையைவிட ஆபேலின் காணிக்கை எந்த விதத்தில் சிறந்ததாக இருந்தது? உண்மையில், காயீன் தேவனுக்குச் செலுத்திய காணிக்கை ஆபேலின் காணிக்கையைக் காட்டிலும் அதிக கடின உழைப்பின் விளைவாகும்.ஏனென்றால், காயீன் நிலத்தை உழுது, விதைகளை விதைத்து,தினமும் கவனமாக தண்ணீர் பாய்ச்சினான்,அவனுடைய கடின உழைப்பின் பலன் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டது (ஆதியாகமம் 4:2, 3).அதேசமயம் ஆபேலின் காணிக்கையை ஒப்பிடுகையில் அது எந்த கடின உழைப்பையும் உள்ளடக்கவில்லை.அவன் மந்தையைக் காப்பவனாக இருந்தான்.ஆட்டு மந்தை இனச்சேர்ந்ததின் பலனாக முதலில் பிறந்த குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை காணிக்கையாக தேவனுக்குக் கொண்டு வந்தான்.

நமது முயற்சிகள் முதன்மையாக தேவனைப் பிரியப்படுத்துவதில்லை. தேவனின் பார்வையில் சரியானதை (தேவ நீதி ) நாம் ஏற்றுக்கொள்வது அவரைப் பிரியப்படுத்துகிறது. நம் வாழ்விலிருந்து பாவங்களை நீக்கவோ அல்லது அகற்றவோ இரத்தம் மட்டுமே தேவைப்படுகிறது. இரத்தம் சிந்தாமல் பாவங்களுக்கு மன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22) ஆபேல் தனது கைகளின் முயற்சியை விட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் செயல்திறனை நம்பினார். எனவே, அவனது காணிக்கை சிறப்பானது மற்றும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு மகிழ்ச்சி அளித்தது!

யோவான் ஸ்நானகன் இயேசுவை மனிதகுலத்திற்கு அறிமுகப்படுத்தியபோது,அவர் மேசியாவாகவோ அல்லது ராஜாவாகவோ (இயேசுதான் என்றாலும்)அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக இயேசு முழு உலகத்தின் பாவங்களைப் போக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டார் (யோவான் 1:29,36). தேவனின் இந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் மனிதகுலத்தை மீட்டு,அவனை தேவனுக்கு ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்குவதற்காக வழங்கப்பட்டது (வெளிப்படுத்துதல் 5:9,10).

ஆம் என் பிரியமானவர்களே, உங்களையும் என்னையும் தேவனின் பார்வையில் சரியானவர்களாக (நீதிமான்களாக) மாற்றும் தேவனின் ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளும்போது,நாம் நீதிமான்களாக இருக்கிறோம்,அது தேவனின் தியாகத்தால் கிடைத்தது, மனிதனின் முயற்சியால் அல்ல மற்றும் மனிதகுலத்தின்படி நீதிமான்கள் அல்ல.
இயேசுவின் இரத்தமே உங்களை முழுமையாக்குகிறது என்று நீங்கள் அறிகைசெய்யும்போது, உங்கள் உடல்நலம், செல்வம் மற்றும் பிற குறைபாடுள்ள பகுதிகளுக்குள் அது நுழைந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அவருடைய வாழ்க்கையையும்,அவருடைய ஆஸ்தியையும்,அவருடைய ஆசீர்வாதங்களையும் உங்களுக்குள் கொண்டு வருவதற்கு அது தேவன் விடும் நேரடி அழைப்பாகும். ஆமென் 🙏

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்!

03-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்!

9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10.எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.வெளிப்படுத்துதல் 5:9,10 NKJV

தேவன் நம்மை ராஜக்களாகவும்,ஆசாரியர்களாகவும் ஆக்கியுள்ளார். ஆனால், இதை நாம் அனுபவிக்கத் தொடங்கும் முன், பாவம், அடிமைத்தனம், நோய், சாபம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து தேவன் நம்மை மீட்டுவிட்டார் என்பதை நாம் அவசியம் அனுபவிக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே நம்மை முழுமையாக மீட்டு ஆட்சி செய்யும் இடத்திற்கு மாற்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்!

ஆம், “பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமை” என்று இயேசுவே சொன்னார். அடிமை மனநிலையுடன் ஒருவன் ஆட்சி செய்யவோ அல்லது ஆளுகை செய்யவோ முடியாது, ஏனெனில் அவன் பாவத்தால் ஆளப்படுகிறான்.

எனவே, இயேசு கெத்செமனே தோட்டத்திலிருந்து கல்வாரி சிலுவை வரை தனது இரத்தத்தை சிந்தினார், அங்கு அவர் முழு உலகத்தின் பாவத்தின் தண்டனையைத் தாங்கி நிர்வாணமாக தொங்கினார், பாவத்தின் சக்தியை உடைத்ததுமட்டுமன்றி,விரைவில் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து இருந்து முற்றிலுமாக விடுவிப்பார்.
இயேசு தம் இரத்தத்தைச் சிந்தியபோது,அவருடைய சதை கிழிந்தபோது, மிகப்பெரிய தடையானது தகர்ந்தது: தேவனையும் மனிதனையும் பிரிக்கும் ஆலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது (மத்தேயு 27:51). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பிரிவின் நடுச் சுவர் உடைக்கப்பட்டது (எபேசியர் 2:14). திரைக்குப் பின்னால் இருந்த தேவன் இப்போது மனிதனுக்குள் வசிக்கிறார். இது மிகப்பெரிய திருப்புமுனை! அல்லேலூயா !!

என் அன்பு நண்பரே,இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் இரத்தம் என்பதை நீங்கள் உணர் கிறீர்களா?
இயேசுவின் இரத்தத்தில் அன்பு செலுத்தத் தொடங்குங்கள்.இதை உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தடைகளை தகர்த்தெரிவதை காண்பீர்கள்: தொலைந்த நான் கண்டுபிடிக்கப்பட்டேன்.இறந்த நான் இப்போது உயிர்ப்பிக்கப்பட்டேன்.பரிசுத்த ஆவியானவர் இப்போது என்னுடைய தனிப்பட்ட மற்றும் நெருங்கிய நண்பராகிவிட்டார். அவர் தடைகளை திடீரென்று தீர்க்கும் தேவன்! இயேசுவின் இரத்தத்தையும் பரிசுத்த ஆவியையும் துதித்து உரக்கப் பாடுங்கள்,மேலும் உடல்நலம், செல்வம், பாதுகாப்பு மற்றும் மற்ற எல்லா துறைகளிலும் முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்ளாகவும்,ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யுங்கள்!

02-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்ளாகவும்,ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யுங்கள்!

10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.வெளிப்படுத்துதல் 5:10 NKJV

உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வாதமான செப்டம்பர் மாத வாழ்த்துக்கள்!

என் அன்பானவர்களே, இந்த செப்டம்பர் மாதம் இரண்டு பெரிய வாக்குறுதிகளுடன் உதயமாகிறது:
1.இந்த மாதம் உங்களுக்கு மாபெரும் மறுமலர்ச்சியின் (REVIVAL)மாதமாக இருக்கும்!
2.இந்த மாதம் உங்களுக்கு தடைகள் திடீரென்று நிர்மூலமாகும் மாதமாக இருக்கும்!

தேவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் அற்புதமான வெளிப்பாடுகளையும் அவருடைய தனிப்பட்ட மற்றும் சிறப்புப் பொக்கிஷமான பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகளையும் வழங்குவார்.
இந்த இரண்டு நபர்களும் மிகவும் நுணுக்கமாக வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்களின் செயல்பாட்டில் மிகவும் பிரிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்,உங்கள் எதிரியின் ஒவ்வொரு திட்டம் மற்றும் ஆயுதங்களையும் முற்றிலுமாக தகர்த்தெறிகிறார்கள்.மேலும்,எதிரிகளின் அழுக்கு தந்திரங்களை நீங்கள் தேடினாலும்,உங்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் அழிக்கிறார்கள்.

இரண்டாவதாக, இந்த வெளிப்பாட்டின் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியை அனுபவிப்பீர்கள் – அது “திடீரென்று நடக்கும்”.
ஆம் என் அன்பானவர்களே,குறிப்பாக இந்த மூன்று பகுதிகளில் திடீர் முன்னேற்றங்களை அனுபவிக்க தயாராகுங்கள்:
A) தெய்வீக ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையில் திடீர் பெலன் மற்றும் எழுச்சி பெறுவீர்கள்.
B) உங்கள் வாழ்வில் திடீரென்று செல்வ செழிப்படைவீர்கள்.
C) இயற்கைக்கு அப்பாற்பட்ட பரலோக பாதுகாப்பு பெறுவீர்கள்.

என் அன்பானவர்களே, இந்த மூன்று பகுதிகளையும் நான் பட்டியலிட்டிருந்தாலும், திடீர் முன்னேற்றம் உங்கள் வாழ்க்கையின் பிற பகுதிகளான தொழில், கல்வி, வணிகம், தொழில், குடும்பம், ஊழியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஜெப வாழ்க்கை (கடவுளுடனான உறவு) மற்றும் வேதப்பூர்வ தியானங்கள் (தேவனின் வெளிப்பாடுகள்) ஆகிய பகுதிகளில் மறுமலர்ச்சி அடைவீர்கள். அல்லேலூயா!
நான் இதைப் பற்றி நினைக்கும் பொழுது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாயிருக்கிறீகள்!
நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு ராஜா மற்றும் பிரதான ஆசாரியாராக,பூமியில் ஆட்சி செய்ய நியமிக்கப்பட்டுள்ளீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்ளாகவும்,ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யும் அனுபவத்தைப் பெறுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

30-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.ஏசாயா 32:1 NKJV
11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12. அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். எரேமியா 1:11-12 NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில்,இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான அவரது வாக்குறுதியை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன், ராஜா நீதியில் ஆட்சி (RIGTEOUSNESS) செய்வார்,அவருடைய இளவரசர்கள் நியாயம்(JUSTICE) செய்வார்கள்.
என் அன்பான நண்பர்களே, நாம் காரியங்களை இயற்கை உலகில் பார்ப்பதற்கு முன்,ஆன்மீக உலகில் பார்க்க வேண்டும்,ஏனென்றால் எல்லாமே இந்த உயர்ந்த மண்டலத்திலிருந்து தான் தொடங்குகின்றன.
ஆகையால்,அப்போஸ்தலன் பவுல் விசுவாசிகளுக்காக மனக்கண்கள் திறக்கும் ஞானத்திற்காக ஜெபித்தார்,இது நமக்காகவும் நம் அன்புக்குரியவர்களுக்காகவும் இன்று நம்முடைய ஜெபமும் கூட.

“நீ எதை காண்கிறாய்” என்று தேவன் எரேமியாவிடம் கேட்டபோது, ​அவர் ஆன்மீக உலகில் கண்டதை கூறினார்.தேவன் பார்த்த பிரகாரமே எரேமியாவும் பார்த்ததால்,தேவன் அவனுடைய விசுவாசத்தை ஏற்று தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.
இன்று உங்கள் வாழ்க்கையிலும் இது நடக்கும்! நீங்கள் ஒடுக்கப்பட்டிருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கை,உங்கள் சுற்றுப்புறம்,உங்கள் பணியிடம் மேலும் உங்கள் நாட்டில் இவை அனைத்திலும் உங்களுக்கு அநீதியான காரியங்கள் நடக்கலாம்.ஆனால், தேவன் மிக விரைவில் விஷயங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சாதகமாக திருப்புவார்! அது உறுதி!!
இயேசு கிறிஸ்து மகிமையின் ராஜா,அவர் நீதியில் ஆட்சி செய்கிறார்,எனவே அவருடைய பிள்ளைகள் இயேசுவின் நாமத்தில் நியாயத்துடன் ஆட்சி செய்வார்கள்!

இந்த மாதம் முழுவதும் நம்மோடு அவர் பேசிய மற்றும் எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் மிகவும் பிரமாதமாக நம்மை வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி மற்றும் துதிகளை ஏறெடுக்கிறேன்.
‘இன்று உங்களுக்கான கிருபை’என்ற தின தியானத்தை படிக்கவும், தியானிக்கவும் என்னுடன் தினமும் இணைந்ததற்கு நன்றி.
வரும் செப்டம்பர் மாதத்திலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரோடும்,என்னோடும் இணைந்திருங்கள் .
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!