Category: Tamil

img_136

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

08-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். I கொரிந்தியர் 2:9-10 NKJV

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய். தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்)உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,உங்கள் சமகாலத்தவர்களை விட உங்களை உயரச் செய்யும்.

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த ஆன்மீக உணர்வுகளை நம்மில் எழுப்பி பாதுகாக்க முடியும். ஒரு விசுவாசியின் வெற்றி இந்த ஆன்மீக உணர்வுகள் எழும்பி தேவனோடு நம்மை இணைப்பதால் தான். பரிசுத்த ஆவியியானவரோடு இருக்கும் ஐக்கியமே இதை செய்கிறது!

எந்தவொரு மனிதனும் தேவனிடமிருந்து பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு பரிசுத்த ஆவியாகிய நபர்தாமே.அவர் பிதாவாகிய தேவனின் தனிப்பட்ட பொக்கிஷமாயிருக்கிறார்.

தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய பரிசுத்த ஆவியை அருளுவதில் பிதா மகிழ்ச்சியடைகிறார்,ஏனென்றால் கர்த்தராகிய இயேசு பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை (பாவத்தால் உண்டாக்கப்பட்ட) தன் மீது சுமந்து கொண்டு அதை முற்றிலுமாக சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

கல்வாரியில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டு அதன்மூலம் பரிசுத்த ஆவியானவர்,இப்போது விசுவாசிக்கிற ஒவ்வொருவரின் இதயத்திலும் என்றென்றும் வசிக்க வழிசெய்தது.
விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் நபரை அங்கீகரிக்கவும், அவருடைய வழிகாட்டுதல் (ஞானம்) மற்றும் கைரோஸ் (புரிதல்) எனப்படும் அவரது நேரத்திற்காகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும்போது அது மனித எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாகவும்,மனித கற்பனைக்கும் மனித புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கும்.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தேவனுடைய நீதியின் அடிப்படையில் செயல்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டு,அனைத்து மனிதகுலத்திற்கும் இலவச பரிசாகக் கொடுக்கப்படுகிறது, எனவே, “நான் கிறிஸ்துவுக்குள் தேவநீதி ” என்று நம்பி ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யும்போது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களில் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள்!
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம்  !!

img_137

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

07-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். ஏசாயா 32:3-4 NKJV.

உலகத்தில் பிறர் பார்க்க முடியாத காரியங்களை பரிசுத்த ஆவியானவரே உங்களைப் பார்க்க வைக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட பாலைநிலத்தில் உள்ள நீர் ஊற்றை பார்க்க ஆகாரின் கண்களை திறந்தார்.அதன்மூலம் கொடூர வெயிலின் காரணத்தால் மரணத்தின் விளிம்பில் இருந்த அவளது மகனின் தாகத்தைத் தணித்தார். (ஆதியாகமம் 21:19)

இஸ்ரவேல் தேசத்தில் நிலவிய கடும் வறட்சிக்கு( பஞ்சம்) முற்றுப்புள்ளி வைத்து,கோடிக்கணக்கான மக்களை பயங்கரமான மரணத்திலிருந்து காப்பாற்றிய பெரு மழையின் சத்தத்தை எலியா தீர்க்கதரிசிக்குக் கேட்கச் செய்ததும் பரிசுத்த ஆவியானவர் தாமே. (1 இராஜாக்கள் 18:41-45).

அதே பரிசுத்த ஆவியானவர் யோபுவின் புரிந்துகொள்ளுதலை திறந்து, சுய நீதியின் மூலம் விழுங்கப்பட்டு மரண படுக்கையிலிருந்த யோபுவை தேவனுடைய நீதியை விட்டு சுய நீதிக்கு சென்ற காரணத்தை புரியச்செய்தார். பின்னர், யோபுவின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் இழந்ததை விட இரண்டு மடங்கு மீட்டெடுத்துக்கொடுத்தார். (யோபு 42: 2-6,10,12).

பரிசுத்த ஆவியானவரே விசுவாசிகளை பரலோக மொழியில் (அந்நிய பாஷைகளின் வரம்) பேசவும், அவருடைய பரலோக ஆலோசனையைப் பெறவும்,நீதியின் பாதையில் நடத்தவும் செய்கிறார்.இது விசுவாசிகளை பூமியில் இருக்கும் போதே அனுபவரீதியாக பரலோகத்தை அனுபவிக்கச்செய்கிறது.ஆமென் 🙏

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய்.தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்) உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,மற்ற எல்லா சமகாலத்தவர்களை விடவும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.நமது நீதியான இயேசுவின் நிமித்தம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உங்கள் அன்பான தேவனாகவும் மற்றும் சிறந்த நண்பராகவும் இருக்கிறார்,இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க உதவுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

06-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது எதிர்க்காற்றுகள் அனைத்திலிருந்தும் உங்களை மறைக்கிறது.
கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, ஒவ்வொரு கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்தும் உங்களை மூடுகிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதியானது உங்களுக்குள் இருந்து ஜீவத்தண்ணீரின் ஆறுகளை ஓடச் செய்கிறது,நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களைச் செழிக்கச் செய்கிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதி என்பது ஷெக்கினா மகிமை மேகமாகும்,இது உங்கள் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் குறிப்பாக உங்கள் வனாந்தர பயணத்தின் போது உங்களைச் சூழ்ந்துகொள்ளும் கர்த்தர்,இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியேறும் போது மேகத்ஸ்தம்பமாக முன்சென்றது போல உங்கள் வாழ்க்கையிலும் முன் செல்வார்.

ஆம் என் பிரியமானவர்களே, இந்த வாக்குறுதிகள் உங்களுடையது, நீங்கள் நிச்சயமாக இந்த மாதம் இயேசுவின் நாமத்தில் சாட்சியாக எழும்புவீர்கள்!

உங்கள் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்று இயேசு சிலுவையில் உங்களுக்காக தியாகம் செய்து என்றென்றும் நீதிமானாக்கியதால் அவரில் அடைக்கலம் பெறுங்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்ற உணர்வு, அவமானம், தனிமையின் அச்சுறுத்தல், ஊக்கமின்மை மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது – மேலே கூறப்பட்டுள்ளபடி இந்த ஆசீர்வாதங்களை அறிக்கையிட்டு சொல்லுங்கள்,அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இதைத் தவறாமல் செயல்படுத்துவார். ஆமென் 🙏

மனிதனால் அடையப்பட்ட நீதியில் அல்ல,தேவனின் தயவில் மட்டுமே நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்ட நீதியைக் காண்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

05-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். ஏசாயா 32:1 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் அன்பானவர்களே, உங்கள் நிலைப்பாடு உங்கள் செயல்திறனைத் தீர்மானிக்கிறது மற்றும் உங்கள் நிலையிலிருந்து உங்கள் நன்மைகளைப் பெறுகிறீர்கள்.

ஒரு தேசம் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தினால் மட்டுமே,அவருடைய குழுவினர்கள் (அமைச்சர்கள்) அவர்களுக்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்ற முடியும்.
எனவே,நீதியில் ஆட்சி செய்யும் எந்தவொரு ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் தனது மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நீதியே காரணம். ஏனெனில் உண்மையான நியாயம், நீதியிலிருந்து மட்டுமே வருகிறது.

அப்படியிருந்தும், தனிப்பட்ட கண்ணோட்டத்தில்,தேவன் தம்முடைய நீதியை நம்மிடம் பரிமாற்றம் செய்யும்போது மட்டுமே நமது வாழ்க்கை சரியானதாக இருக்கும். இதை வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவின் மரணத்தின் விளைவாக நாம் நீதிமான்களாக நியாந்தீர்க்கப்பட்டோம், எனவே நம் வாழ்க்கையும் சரியானதாக இருக்க.நமது செயல் நமது நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படுகிறது. அதுவே நாம் யார் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பாவத்தில் கருவுற்றிருந்த நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆனதற்கு,காரணம் ஆவியானவரே. பாவமே அறியாத இயேசு தம் பிதாவுக்கு முழுமையாக கீழ்ப்படிந்ததால் பரிசுத்த ஆவியானவரால் மரித்தோரிலிருந்து எழுப்பபட்ட்டு நாம் நீதிமான்களாக மாற்றப்பட்டோம். ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக மாற்றப்பட்ட நாம் நீதியைச் செய்கிறோம். அல்லேலூயா!

இன்று, என் அன்பானவர்களே “நீங்கள் என்றென்றும் நீதிமான்கள்” என்ற சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த வலிமையான செயல்பாட்டை நீங்கள் நம்பும்போது, ​உங்கள் வாழ்க்கை முறை மாறுகிறது,மேலும் நீங்கள் நேர்மறையான முடிவுகளைக் காணத் தொடங்குகிறீர்கள். இந்த மாதம் இயேசுவில் பரிசுத்த ஆவியானவர் நமக்குச் செய்வதாக வாக்குறுதியளித்த நன்மைகளையும் பெறுவீர்கள்.
நீங்கள் அவருடைய நீதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் இன்று நியாயம் , நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே பெற நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_157

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்!

31-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்!

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்குள் வரும்வேளையில் , ​​இந்த மாபெரும் மற்றும் அற்புதமான உண்மையை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன் – நீங்கள் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள உங்கள் கனவுகள் மட்டுமல்ல நீங்கள் நினைத்து பார்க்க முடியாத கனவுகளை சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவன் உங்களுக்கு செய்கிறார்.

ஒவ்வொரு காலையிலும்,நம் மூலம் விரும்பிய வெளியீட்டைக் காண அனைவருக்கும் முதலாக சரியான உள்ளீடு தேவைப்படுகிறது.
எந்த நிபந்தனையின்றி,உங்கள் முயற்சியோ,உழைப்போ இல்லாமல்,அளவில்லாமல் இலவசமாகக் கொடுக்கப்படும் அவருடைய கிருபையே உங்கள் உள்ளீடாக இருக்க வேண்டும்.அவருடைய கிருபையை பெறுவது,உங்களை முழுவதுமாக நிரப்புகிறது மற்றும் நிரம்பி வழிகிறது உங்கள் மூலம் சுற்றியுள்ள மக்களையும் ஆசீர்வதிக்கிறது!

தேவனுடைய பார்வையில் இன்று நீங்கள் நீதிமான்களாக திகழ்வது இயேசு உங்களுக்கு இலவசமாக கொடுத்த நீதியின் வரத்தின் மூலம் ஆகும். (அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் பிதாவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்ததே அந்த நீதியாகும் ).ஆகவே இந்த நீதியை அறிக்கையிடும்போது உடனடியாக இல்லாவிட்டாலும் நிச்சயமாக ஒரு நாள் அவர் நீதியோடும் என் செயல்கள் பொருந்தும்.ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே அந்த கிரியையை எனக்குள் நடப்பிக்கிறார்.

இந்த ஜூலை மாதம் முழுவதும் நம் அனைவரையும் மிகவும் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையின் தியானத்தில் என்னுடன் சேர்ந்து, உங்களின் பொன்னான நேரத்தை ஓதுக்கியதற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தர் தம்முடைய நீதியில் உங்களை நிலைநிறுத்தி, இயேசுவின் நாமத்தில் அவருடைய நிரம்பி வழியும் கிருபையால் உங்களைத் திருப்திப்படுத்துவாராக!

வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் அற்புதமான வெளிப்பாடு மற்றும் அபிஷேகத்திற்காக இயேசுவின் நாமத்தில் என்னுடன் இணைந்திருங்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

30-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

6.அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.யோவான் 21:3,6 NKJV

“உன் வலையை வலது பக்கம் வீசு”என்பதன் பொருள் தேவன் உன்னைச் சரியாகப் பார்க்கும் பக்கத்தில் இருப்பது என்று பொருள்படுகிறது. தேவன் உங்களை அவருடைய பார்வையில் சரியானவன் என்று வைத்திருக்கும் ஒரு நிலை உள்ளது, அந்த நிலை கிறிஸ்துவில் உள்ளது. கிறிஸ்து இயேசுவில் மட்டுமே தேவன் உங்களை சரியாகப் (RIGHTEOUS) பார்க்கிறார். அவருடைய ஆசீர்வாதத்தை முழுவதுமாக நீங்கள் பெறுவதற்கு அதுவே காரணம்.
நீங்கள் எத்தனை முறை பாவத்தில் விழுந்தாலும்,எவ்வளவு தூரம் வழிதவறிச் சென்றிருந்தாலும் சரி, நீங்கள் எத்தனை முறை தவறான முடிவுகளை எடுத்திருந்தாலும் சரி, இயேசு உங்கள் தவறுகளை எல்லாம் சரி செய்ய வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவர் மற்றும் நீதியுள்ளவர்!

இயேசு கிறிஸ்து உங்களுக்குப் பதிலாக பிதாவின் சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர் உங்கள் மரணத்தை அனுபவித்து,உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கி, கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனின் நீதி என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, நீங்கள் அவருடைய பரலோக ஆலோசனையைக் கேட்டு அவருடைய மிகுதியைப் பெறமுடிகிறது. அல்லேலூயா!

எனவே என் அன்பானவர்களே,நான் மீண்டும் மீண்டும் அதே கருத்தை முன்வைக்கிறேன்- “கிருபையை மிகுதியாகப் பெறுபவர்கள்,தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகுதியைக் காண்பார்கள்,மேலும் நீதியின் பரிசைப் பெறுபவர்கள் தங்கள் தவறுகளை இயேசு கிறிஸ்துவின் மூலம் சரிசெய்யப்பட்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையால். “நீங்களும் கிறிஸ்துவில் இந்த சரியான நிலையை அனுபவிக்க முடியும் மற்றும் அதன் ஆசீர்வாதங்கள் மிகுதியாக இருக்கும். சரி செய்யப்பட்ட ஒவ்வொரு தவறுக்கும் நீங்களும் சாட்சியாக இருக்க முடியும் மற்றும் இயேசுவின் நாமத்தில் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,பூமியில் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்!

29-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,பூமியில் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்!

3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்..யோவான் 21:3,6 NKJV

பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் திரும்ப மீன்பிடிக்கச் செல்வோம் என்று எடுத்த முடிவானது தவறாக இருந்தாலும்,உயிர்த்தெழுந்த இயேசு அவர்களின் தவறான முடிவில் அவர்களை மேலும் துன்பப்படுத்த விடாமல்,அவர்களைத் தேடி வந்து,தம்முடைய பரலோக ஆலோசனையின் மூலம்,மீன் பிடிக்க சென்றவர்களை மனிதர்களை பிடிக்கின்றவர்களாக இரக்கத்துடன் வழிநடத்தினார் மற்றும் அவருடைய தெய்விக ஆலோசனையின் மூலம் அபரிவிதமான மீன்களை பிடிக்கச்செய்தார்.

ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,நீங்கள் சரியான இடத்தில் நிலைகொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், நிலைமை எவ்வளவு குழப்பமாக இருந்தாலும், பற்றாக்குறை மற்றும் தேவையால் பாதிக்கப்பட்டாலும் அல்லது அதிருப்தி மற்றும் வேதனையால் பாதிக்கப்பட்டாலும்- இந்த நாளில், நான் பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறேன்.உங்கள் முயற்சிகள் இயேசுவின் நாமத்தில் அபிரிவிதமான ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கும். ஆமென் 🙏

இந்த வாரமானது இந்த மாதத்தை முடிக்கும்வேளையில், ​​நமது விலையேறப்பெற்ற ஆண்டவர் கிறிஸ்து இயேசு உங்கள் பாதையை மிகுதியால் வழிநடத்துவார். அல்லேலூயா!
உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு குறைபாட்டையும் நீங்கள் ஆளுகை செய்வீர்கள் – உடல் அல்லது ஆன்மீகம், பொருள் அல்லது உணர்ச்சி,தொழில் அல்லது கல்வி,உறவு அல்லது வேறு எந்த பகுதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த இடத்தில் இயேசுவின் நாமத்தில் நீங்கள் ஏராளமான கிருபையையும் நீதியின் பரிசையும் தொடர்ந்து பெறுவீர்கள்! நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நிறைவானவர்களாயிருந்து, ஒவ்வொரு நற்கிரியைக்கும் மிகுதியாயிருக்கும்படி,தேவன் உங்கள்மேல் சகல கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார். (2 கொரி 9:8) ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,பூமியில் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_182

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

26-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.யோவான் 21:7,11 NKJV

இங்கே நாம்,இருவர் ஒன்றாக ஒத்துப்போகும் போது “ஒப்பந்தத்தின் வல்லமையை” பார்க்கிறோம்!அது ஆச்சரியமாக இருக்கிறது!!

உயிர்த்தெழுந்த இயேசுவை(கிறிஸ்து இயேசுவை)பகுத்தறிந்து,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை வெளிப்படுத்த 2 சீஷர்கள் இணைந்ததை நாம் உணர்கிறோம்.மேலும் உயிர்த்தெழுந்த தேவன் நம் வாழ்வின் இருண்ட கட்டத்தில் நம்மை மீட்டெடுக்க ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறார் என்ற இந்த விலைமதிப்பற்ற வெளிப்பாடு நமக்கு கிருபையாக அளிக்கப்படுகிறது .உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகரை “பார்த்தபின்” நாம் மீண்டும் இருந்த வண்ணமாக இருப்பதில்லை!

மேலே உள்ள வேத வசனத்தை நீங்கள் கவனமாக கவனித்தால், பரிசுத்த ஆவியானவர் அன்பான அப்போஸ்தலன் யோவானுக்கு கர்த்தரை பகுத்தறியும் ஞானத்தை கொடுத்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும், யோவான் “இது கர்த்தர்” என்று வெளிப்படுத்தினார், அப்பொழுது பேதுருவுக்கு, தேவனின் ஆவியானவர் அவருடைய வல்லமையை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்தார், அவர் ஒரு மிகப்பெரிய மீன் அறுவடையின் வலையை தனி ஆளாக கரைக்கு இழுத்தார். கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை இரண்டு இரண்டாக அதாவது ஜோடியாக இணைத்தார் என்பதை நினைவில் வையுங்கள் (லூக் 10:1).இப்படிப்பட்ட ஒரு ஜோடி பேதுருவும் யோவானும் அவர்கள், அப்போஸ்தலர் 3:1-8 இன்படி ,தாயின் வயிற்றில் இருந்து முடமாக பிறந்த மனிதனின் வாழ்க்கையில் தேவனின் அற்புதமான உயிர்த்தெழுதல் வல்லமையை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம்.

ஆம் என் அன்பானவர்களே, தேவன் தன்னையும் அவரது அசாத்திய வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காகத் தம்முடைய தீர்மானத்தின்படி ஜனத்தை ஜோடி ஜோடியாக இணைத்துள்ளார். திருமணம் ஆனவர்கள் மத்தியில்,கணவனையும் மனைவியையும்பெரிய காரியங்களை கர்த்தருக்காக செய்ய இணைத்துள்ளார். இன்னும் திருமணமாகாதவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களையும் ஜோடியாக இணைத்துள்ளார் பவுல் மற்றும் பர்னபாஸ் மேலும் பவுல் மற்றும் சீலாஸ் போல தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவ ராஜ்யத்தில் பெரிய காரியத்தை செய்ய ஒன்றுசேர்க்கப்படுபவர்கள்.ஆகவே, இருவர் உடன்படுவதில் மாபெரிய வல்லமை உண்டு!

இந்த தெய்வீகக் கூட்டாண்மையைப் பிடித்துக் கொண்டு இருப்பது குறிப்பாக கணவன்-மனைவி இடையே உடன்படுவது நமது பொறுப்பு,ஏனெனில் அவர்கள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் நற்செய்தியின் இணை வாரிசுகள். இந்த புனிதமான உறவில் யாரையும் இடையிலோ அல்லது தலையிடவோ அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஆதி பெற்றோர்கள்,ஆதாம் மற்றும் ஏவாள் இடையே சர்பத்தை அனுமதித்ததின் விளைவாக ஏற்பட்ட குழப்பம் அதுவே மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு காரணம். முழு மனிதகுலமும் இந்த ஏமாற்றம் மற்றும் தந்திரமாக ஊடுருவியதின் விளைவாக இன்றுவரை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நம்மை மீண்டும் தேவனிடம் திருப்பவும் இழந்த மகிமையை மீண்டும் கொடுக்கவும் தம்முடைய குமாரனாகிய இயேசுவை ஜீவபலியாக அனுப்பிய தேவனுக்கு நன்றி. அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒன்றிணைத்து ஒருவருக்கு பகுத்தறிவையும் (DISCERNMENT) மற்றவருக்கு நிரூபணத்தையும் (DEMONSTRATION) கொடுக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.ஒன்றாக ஏற்று உடன்படுங்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

25-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.லூக்கா 5:6-7 NKJV
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால்,அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:6,11 NKJV

பேதுருவும் மற்ற சீஷர்களும் தன்னிச்சையாக மீன்பிடிக்கச் சென்றபோது பலனளிக்காமல்இருந்ததை வேதத்தில் இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பதையும்,இரண்டு சந்தர்ப்பங்களிலும் கர்த்தருடைய தலையீடு ஏராளமானதை (கற்பனைக்கு எட்டாத பிடிப்பு) கொண்டுவந்ததைக் காண்கிறோம்: அந்த அற்புதம் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருமுறையும்,அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின் மற்றொரு முறையும் நடந்தது.

முதல் சந்தர்ப்பத்தில்,மீன் பிடிப்பு அதிகமாக இருந்ததால்,வலை கிழிந்தது,படகு மூழ்கியது,ஆனால் இரண்டாவது நிகழ்வில்,வலை கிழியவில்லை படகும் மூழ்கவில்லை. இந்த இரண்டிற்க்கும்
என்ன வித்தியாசம்?

முதல் நிகழ்வில், பேதுருவின் நண்பர்கள் பேதுருவுக்கு உதவ வந்தனர்,அபரிமிதமான மீன்பிடிப்பை வலை கிழிந்ததால் முழுவதுமாக நழுவவிடாமல் காப்பாற்றினர்,ஆனால் இரண்டாவது நிகழ்வில் பேதுருவைச் சுற்றி இருந்த சீஷர்களிடம் உதவி வரவில்லை,மாறாக பேதுருவுக்குள் இருந்து உதவி வந்தது.
காரணம், முதல் நிகழ்வில், இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருந்தார், ஆனால் இரண்டாவது நிகழ்வில், கிறிஸ்து,பேதுரு மற்றும் சீஷர்களுடன் இருக்கவில்லை, மாறாக உயிர்த்தெழுந்த இரட்சகர் பேதுருவுக்குள் வாசமாக இருந்தார். இந்த வித்யாசமே வெற்றிக்கு காரணம்!

ஆம் என் அன்பானவர்களே,நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்து உங்களில் வாழ்கிறார். அவரே மகிமையின் நம்பிக்கை! _
பரிசுத்த ஆவியானவர்”உங்களுக்குள் தெய்வீக வாழ்க்கையை”மிகவும் உண்மையானதாக மாற்றினால்,உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இருந்தவண்ணமாகவே இருக்காது. “சிறு பிள்ளைகளே,நீங்கள் தேவனால் உண்டானவர்கள், அவர்களை ஜெயித்தீர்கள்,ஏனென்றால் உங்களில் இருப்பவர் உலகத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” என்று எழுதியிருக்கிறபடி நீங்கள் நம்பிக்கையோடும் வெற்றியோடும் நடப்பீர்கள்.I யோவான் 4:4.அல்லேலூயா!

உங்கள் பரலோகத் தகப்பன் இயேசுவின் மகிமையான நாமத்தில்”உங்களில் உள்ள கிறிஸ்து” பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை உங்களுக்கு வழங்குவாராக! ஆமென் 🙏

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

24-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

3″சீமோன் பேதுரு சோர்வடைந்து அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். அவர்கள் அவரிடம், “நாங்களும் உன்னுடன் போகிறோம்” என்றார்கள்.அவர்கள் வெளியே சென்று உடனடியாக படகில் ஏறினார்கள், அன்று இரவு அவர்களுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை.
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:3,6,11 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,இன்று நான் யோவான் எழுதிய சுவிசேஷத்தின் படி அதிகாரம் 21 லிருந்து மூன்று முக்கியமான வசனங்களை நமது தியானத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளேன்:
வசனம் 3:சீஷர்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள்,ஆனால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியவில்லை.
வசனம் 6: அவர்கள் ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்,ஆனால் அது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்ததால் அவர்களால் அதை இழுக்க முடியவில்லை.
வசனம் 11: சீமோன் பேதுரு ஒற்றைக் கையால் ஏராளமான மீன்களைக் கரைக்கு இழுத்தார்.அது அற்புதம்!

இயேசு அவர்களுடன் பிரசன்னமாகாமல் தங்கள் சொந்த பலத்தில் செய்ததால் அவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் (வசனம் 3ல்) கர்த்தர் அந்த சூழ்நிலைக்குள் அழைக்கப்படவில்லை.அது சீஷர்களுடன் “கிறிஸ்து இல்லாமல்” இருக்கும் அனுபவம்.

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்தார்கள்,ஏனென்றால் அவர்கள் வலையை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களுக்கு துல்லியமாக சொன்னார். அது “கிறிஸ்து அவர்களுடன்” இருக்கும் அனுபவம். இருப்பினும், அவர்களால் அதை கரைக்கு இழுக்க முடியவில்லை,ஏனென்றால் இயேசுதான் அவர்களை வழிநடத்தினார் என்பதை அவர்கள் உணரவில்லை அல்லது இயேசு அந்த சூழ்நிலையில் வெளிப்பட்டதை அவர்கள் அறியவில்லை (வசனம் 4,6).

அவர் இயேசுவாகிய கர்த்தர் என்று யோவானால் சீமோன் பேதுருக்குக் கூறப்பட்டபோது, கிறிஸ்து தன்னில் இருக்கிறார் என்ற விழிப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவ ஆவியானவர் இப்போது அவரில் வாசமாயிருந்து,சாவுக்கேதுவான அவருடைய சரீரத்திற்கு உயிர் கொடுக்கிறார் (ரோமர் 8:11) என்ற உணர்வு ஏற்பட்டது . ஆவியானவர் தனக்குள் இருக்கிறார் என்ற இந்த உணர்தல் பேதுருவுக்கு ஒரு அசாதாரண மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையை உருவாக்கியது,எல்லா சீஷர்களும் ஒன்றிணைந்து இழுக்க முடியாத முழு வலையையும் பேதுரு ஒரு கையால் இழுத்தார். அல்லேலூயா!

இன்று உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியின் மூலம் இயேசுவின் நாமத்தில் முடியாததை முடிக்க பரலோக பிதா உங்களுக்கு தயவு பாராட்டுவாராக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள் .

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !