Category: Tamil

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

26-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. ( மத்தேயு 27:50-52 NKJV)

மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்ட தேவாலயத்தில் கடவுளின் பிரசன்னம் திரையிடப்பட்டிருந்தது, மேலும் பிரதான ஆசாரியர் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உள்ளே நுழைய முடியும். ஆனால், கடவுள் தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவரிலும் வசிக்க விரும்பினார்.

இந்த காரியம் எப்படி சாத்தியமானது ? – இயேசு முழு உலகத்தின் பாவங்களையும் தன்மீது சுமந்துகொண்டு, சிலுவையில் அவருடைய சரீரத்தில் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொண்டு செய்த இந்த விலையேறப்பெற்ற தியாகத்தின் மூலம் மட்டுமே இதை அடைய முடிந்தது . இயேசு கூக்குரலிட்டு தம்முடைய ஆவியை ஒப்புக் கொடுத்தார். அவரது மரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவினையின் நடுச்சுவரை கிழித்தெறிந்தது. எனவே கடவுளின் பிரசன்னம் மனிதர்களின் இதயங்களுக்குள் நுழைந்தது.
அல்லேலூயா 🙏

இன்று ,சிலுவை தியாகத்தின் 2வது நோக்கமாக நாம் பார்ப்பது – கடவுள் மனிதனுக்குள் என்றென்றும் வாசம் செய்வதாகும் . கிறிஸ்து நமக்குள் வசிப்பதே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறது .

இயேசுவின் பிறப்பின் வாயிலாக கடவுள் நம்மோடு இருக்கிறார். இம்மானுவேல் என்பதற்கு ” கடவுள் நம் மோடு இருக்கிறார் “என்று பொருள்படுகிறது .ஆனால் இயேசுவின் மரனத்தின் வாயிலாக கடவுள் நமக்குள் வாசம்பண்ணுகிறார் .
இந்த உண்மையை நீங்கள் நம்பி, இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, ​​உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் செயல்படத் தொடங்குகிறது.
உயிர்த்தெழுதல் என்றால் உங்களுக்குள் கிறிஸ்த வாசம்பண்ணுகிறார் என்றும், இம்மானுவேல் என்றால் உங்களுடன் கடவுள் இருக்கிறார் என்றும் பொருள்படும் .

உயிர்த்தெழுதல் என்பது பாவத்தால் கறைபடாத முடிவற்ற வாழ்வாகும், அங்கு நீங்கள் வலி, நோய், சிதைவு, போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. மரணத்தையே இந்த முடிவற்ற வாழ்க்கை விழுங்குகிறது மற்றும் நீங்கள் என்றென்றும் சாவாமையுடன் வாழ்கிறீர்கள் நீங்கள் என்றென்றும் சுதந்திரமாக இருக்கிறீர்கள், என்றென்றும் தெய்விக சுகத்தோடு இருக்கிறீர்கள,மற்றும் என்றென்றும் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் . ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை ) நமக்காகப் பாவமாக்கினார்.II கொரிந்தியர் 5:21

என் அன்பானவர்களே, உயிர்த்தெழுதல் ஒரு நிகழ்வு மட்டுமல்ல,அது ஒரு அற்புத அனுபவம். இருப்பினும், சிலுவையின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது மட்டுமே உயிர்த்தெழுதலை அனுபவிக்க முடியும்.
சிலுவை தியாகத்தின் மூன்று முக்கிய நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, உங்களையும் என்னையும் நீதிமான்களாக்கிய சிலுவையின் முதல் மற்றும் தலையான நோக்கத்தைப் பார்ப்போம்.

அந்த நேரத்தில் சிலுவையின் மீது ஒரு தெய்வீக பரிமாற்றம் நடந்தது.
சர்வவல்லமையுள்ள ஒரே உண்மையான கடவுள், நம்முடைய பாவங்கள், வியாதிகள், துக்கங்கள், குற்றங்கள் மற்றும் கண்டனங்கள் அனைத்தையும் எடுத்து இயேசுவின் உடலில் வைத்தார். இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். மறுபுறம், கடவுள் இயேசுவில் இருந்த நீதியின் உண்மையான தன்மையை எடுத்து, இயேசு இருந்ததைப் போலவே, நம்மை முழுமையாக நீதிமான்களாக்க அதை நம்மீது வைத்தார். அல்லேலூயா!

இதை நீங்கள் விசுவாசித்து, அவருடைய நீதியை அன்பளிப்பாக பெற்று, ஒப்புக்கொள்ளும்போது, “இயேசு என் பாவத்தையும், பாவத்தின் விளைவுகளையும், அதற்கான நியாயத்தீர்ப்பையும் தம்முடைய சரீரத்தில் ஏற்றுக்கொண்டதால்,நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன் என்று அறிக்கையிடுவீர்கள். அப்போது, நீங்கள் உண்மையிலேயே அவருடைய உயிர்த்தெழுதலை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் அனுபவிப்பீர்கள். ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலை அனுபவியுங்கள்!

24-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலை அனுபவியுங்கள்!

அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.(யோவான் 20:9)

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி அனைவருக்கும் ஒரு விசித்திரக் கதையாகத் தோன்றியது மற்றும் அது நம்புவதற்கு மிக உன்னதமான உண்மையாய் இருந்தது ..கர்த்தராகிய இயேசு தம்முடைய பூமிக்குரிய வாசத்தின் போது தம்முடைய உயிர்த்தெழுதலைப் பற்றி பலமுறை தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தாலும் , சீஷர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் எவராலும் அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்றும் பல கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதில்லை,இந்நிலையில் மற்ற புறஜாதியினர் இதை எப்படி உணர்வார்கள்?
நம்மிடம் உள்ள உண்மையான இந்த நற்செய்தியை நாமே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால்,இயேசு உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்,அவரே கர்த்தர் மற்றும் இரட்சகர் என்று மற்ற மனிதர்கள் எப்படி அறிய முடியும்?
அவருடைய உயிர்த்தெழுதலை நாமே அனுபவிக்காதபோது, ​​இந்த நற்செய்தியை அவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது?

என் அன்பானவர்களே, உயிர்த்தெழுதல் என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல அது ஒரு அனுபவம். இருப்பினும், சிலுவையின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளும்போது மட்டுமே உயிர்த்தெழுதலை அனுபவிக்க முடியும்.

எங்கள் அன்புள்ள பரலோகத் தகப்பனே, சிலுவையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள என் மனக்கண்களை திறந்தருளும்.அதனால் உயிர்த்தெழுதலின் வல்லமையை என் இருதயம் புரிந்து கொள்ள தூண்டுவீராக , மேலும் உயிர்த்தெழுதலின் விளைவாக உண்மையான சுதந்திரத்தை நான் அனுபவிக்கவும் மற்றும் என் அருகில் உள்ள ஆத்துமாக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் உதவுவீராக .ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவியுங்கள் !

21-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவியுங்கள் !

19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.(யோவான் 20:19-20) NKJV.

ஆண்டவருடைய சீஷர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்,ஏனென்றால் அவர்கள் எதிர்பாத்திருந்த சுக வாழ்வை தருபவர் மற்றும் தங்களை மீட்பார் என்று முழுமையாக நம்பிய தங்கள் இரட்சகர் யூதர்களின் திட்டமிடப்பட்ட சதியின் படி ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர்கள் அதுவரை இயேசுவோடு வெளிப்படையாகச் சென்றார்கள் ஆனால் இப்போது இப்படிப்பட்ட கொடுமை தங்களுக்கும் ஏற்படும் என்று அஞ்சி அவர்கள் இருந்த அறையில் யாரும் உள்ளே நுழையாதவாறு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து பயத்தோடு காணப்பட்டனர் .

மரணம் தங்கள் இரட்சகரைத் தடுத்து7 நிறுத்த முடியாது என்பதை அவர்கள் அத்தருணத்தில் உணரவில்லை, ஆனால் ,நம் மீட்பர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார்.ஆண்டவராகிய இயேசு சிலுவையில் உலகத்தின் பாவத்தையும், மரணத்தையும் , முழுமையாக ஜெயித்தார் அவர் இப்போது (NOW ) கடவுள் மற்றும் இரட்சகர் !!!
கல்லறையை மூடிய கல் உருட்டப்பட்டது மட்டுமல்ல, இயேசு உள்ளே வருவதைத் தடுக்க மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்ட கதவும் அவரைத் தடுக்க முடியவில்லை. உயிர்த்தெழுந்த இயேசு கம்பீரமாக கல்லறைக்கு வெளியே சரீரமாக நடமாடினார் மற்றும் மூடிய கதவுக்கு ஊடாக கடந்து வந்து அவர்கள் நடுவே வந்தார் . அருமை! அனைவரும் வாயடைத்து பார்த்தனர் ! ஆம் உயிர்த்தெழுதலின் வல்லமையை தடுக்க யாராலும் முடியாதது ! அல்லேலூயா !

என் பிரியமானவர்களே, எந்த வகையான துக்கமோ, மனச்சோர்வோ உங்களை அடைத்திருந்தாலும், எந்த வகையான கவலையும் பயமும் உங்களை முடக்கி, உங்கள் வாழ்க்கையை மட்டுப்படுத்தியிருந்தாலும், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு இப்போது உங்கள் நடுவில் தோன்றுகிறார். ஆமென் !
அவர் உங்கள் பயத்தை ஆற்றல்மிக்க நம்பிக்கையாகவும்,
நோயை நிலையான ஆரோக்கியமாகவும்,
பலவீனத்தை அயராத வலிமையாகவும்,
அவமானத்தை புகழாகவும் மாற்றுகிறார்.
இது உங்கள் நாள்!இயேசுவின் நாமத்தில் இது உங்கள் நேரம்! ஏனென்றால் நம் மீட்பர் நம் மத்தியில் உயிரோடிருக்கிறார்!
ஆமென் 🙏.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய அற்புதமான அன்பை அனுபவியுங்கள் !

20-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய அற்புதமான அன்பை அனுபவியுங்கள் !

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:11, 15-17‬‬)NKJV .

கல்லறை காலியாக இருந்ததை கண்ட மகதலேனா மரியாள் தனது அன்பான இயேசு நாதர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கான எந்த புரிதல் இல்லாமல் அழுது கொண்டிருந்தாள். இயேசுவின் உண்மையான அன்பையும்,மன்னிப்பையும் அவள் ருசித்திருந்ததால்,ஆண்டவர் மீதுள்ள அதீத அன்பின் காரணமாக அவள் அடக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தாள்.
இயேசு அவளை நேசித்த அளவுக்கு இதற்கு முன்பு யாரும் அவளை நேசித்ததில்லை, இன்றும்,இது நம் அனைவருக்கும் பொருந்தும் உண்மை. அவள் அவரது அன்பில் மிகவும் திளைத்திருந்த காரணத்தினால் , அவளுக்கு எதுவும் முக்கியமில்லை.அவளுடைய வாழ்க்கையை கூட ஒரு பொருட்டாக நினைக்கவில்லை .மேலும்,ஆழ்ந்த விரக்தியோடு அழுதுகொண்டே,அவரது உடலை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள்,ஒரு வேளை அந்த உடலைக் கண்டுபிடித்திருந்தால்,அவரை எடுத்துச் சென்றிருப்பாள்.

உயிர்த்தெழுந்த இயேசுவின் முதலாவது கடமை என்னவென்றால், அவர் முதலில் பரலோகத்திற்கு ஏறி, அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்காகவும், பிதாவாகிய கடவுளுக்கு அவருடைய இரத்தத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்பதேயாகும்.ஆனால்,மரியாளின் வைராக்கியமான அன்பு ,பிடிவாதமான அன்பு ,மற்றும் உறுதியானஅன்பு நிச்சயமாக பிதாவாகிய மனதைத்தொட்டு இயேசுவிடம் பரத்துக்கு ஏறும் முன் முதலில் மரியாளுக்கு காட்சியளிக்க பரிந்துரைத்திருப்பார்.என்ன அற்புதமான அன்பு !

என் அன்பானவர்களே ,இன்று,அவருடைய அசாத்தியமான,அற்புதமான அன்பில் திளைத்திருப்போம்.நமது உள்ளார்ந்த அங்கலாய்ப்பும்,கண்ணீரும் இதுவரை செய்யப்பட்ட எந்த உரத்த பிரார்த்தனைகளையும் விட சத்தமாக பேசும்.அது கட்டாயமாக நம் வாழ்வில் அற்புதத்தை நடப்பிக்கும்.ஆமென் 🙏.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய அற்புதமான அன்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய ஜீவனைக் கொடுக்கும் ஆவியை அனுபவியுங்கள் !

19-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய ஜீவனைக் கொடுக்கும் ஆவியை அனுபவியுங்கள் !

7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம் 2:7 NKJV.

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;யோவான் 20:22 NKJV

கடவுள் முதல் மனிதனை (ஆதாமை) உருவாக்கியபோது, ​​அவர் அவனது நாசியில் அவர் உயிர் மூச்சை ஊதினார் ,ஆதாம் ஒரு உயிருள்ள ஆன்மாவானார் (ஜீவ ஆத்துமாவானார்) .ஆதாம் குறையற்றவராக இருந்தார்.அவர் கடவுளைப் போலவே சிந்திக்க திறன் கொண்டிருந்தார். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், பறக்கும் மற்றும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கும் அவர் பெயரிட்டார், அதுவே இன்றுவரை அவற்றின் பெயராக விளங்குகிறது . அவர் பூமியில் ஒவ்வொரு நாளும் கடவுளுடன் நடந்து உரையாடினார். என்ன ஒரு மகிமையான தருணம்! என்ன ஒரு அற்புதமான படைப்பு!!

ஆதாம் உயிருள்ள ஆன்மாவாக ஆக்கப்பட்டதால் அவன் உலகத்தில் ஜீவ சுவாசத்தால் அல்லது தன் ஆத்து மாவால் கடவுளை சாராமல் வாழ முடியும் ! ஆதாமோ பிந்தையதைத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவன் ஒரு வரையறுக்கப்பட்ட திறன், வரையறுக்கப்பட்ட வலிமை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு எல்லாவற்றையும் தானே நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவனுடைய எல்லா முயற்சிகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி இருந்தது, கடைசியில் ஒரு மனிதனும் தவிர்க்க முடியாத மரணம் அதன் விளைவாயிற்று.”கடவுள்-மனிதன்” என்ற நிலையிலிருந்து அவன் வெறும் மனிதனாக மாறினார்.

கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும் ! கடவுளின் ஆதி நோக்கமான “கடவுள்-மனிதன்” என்ற நிலையை நிறைவேற்ற மனிதனை மீட்டெடுக்க இயேசு இந்த பூமிக்கு வந்தார் அவரே நமக்கு ஜீவ அப்பமாக இருக்கிறார். மனுஷனுடைய ஜீவ மூச்சை விட,இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கு அவரே ஜீவனாய் இருக்கிறரர் .ஆம் ஜீவ அப்பமாகிய இயேசு இப்போது உயிர்த்தெழுந்த ஜீவனாயிருக்கிறார்!இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, ​​இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை மனிதனுக்கு ஸ்வாசமாக ஊதினார்.அதினால் பாவம் செய்ய முடியாத ஒரு வெற்றியாளராக நாம் வாழ முடியும். நம்முடைய இந்த உயிரானது சாவாமையுள்ளது,நித்திய நித்தியமாய் தேவனோடு வாழ்வதாகும்!  அல்லேலூயா !

என் அன்பானவர்களே ,மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் .அவர்பரிசுத்த ஆவியை உங்களில் இப்போதே (NOW)ஊதட்டும் .பரிசுத்த ஆவியின் – அதாவது உயிர்த்தெழுந்த வல்லமையின் வாழ்க்கையானது, உங்களில் உள்ள இந்த வாழ்க்கையை நித்திய ஜீவனாக, ஊற்றெடுக்கும் நீரூற்றாக மாற்றும்.உயிருள்ள நதிகள் உங்களிடமிருந்து வெளியேறும். !ஆமென் 🙏.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய ஜீவனைக் கொடுக்கும் ஆவியை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள் !

18-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள் !

15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
(லூக்கா 24:15-16,27) NKJV.

உயிர்த்தெழுந்த இயேசு எவருக்கும் எதிர்பாராத விதத்தில் தோன்றலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .எம்மாவூர் கிராமத்திற்குச் சென்ற இரண்டு சீடர்களுக்கும் அதுதான் நடந்தது. அவர்கள் ஊக்கமிழந்து மற்றும் இயேசுவின் மரணத்தின் செய்தியால் அவர்களின் நம்பிக்கை சிதைந்து காணப்பட்டனர். இயேசுவுக்கு நிகழ்ந்த கொடூரமான மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இருப்பினும், உயிர்த்தெழுந்த இயேசு அருகில் வந்து அவர்களுடைய சோகமான உரையாடலில் கலந்து கொண்டார். அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் தங்களுடைய இயற்கையான கண்களால் கண்டனர் .மாறாக,வேதாகமத்தின் மூலம் தம்மை அடையாளம் காண வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். இதன் மூலம் தேவனைப் பகுத்தறிவது ஆவிக்குரிய கண்களால் இருக்க வேண்டும், இயற்கையான கண்களால் அல்ல என்பதை எல்லா தலைமுறையினருக்கும் நியாயப்படுத்தினார். இல்லையெனில், இயேசு பூமியில் இருந்த காலத்தில் இருந்த தலைமுறை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக தற்போதைய தலைமுறை உணரலாம், அது உண்மையில் அப்படியல்ல.

என் அன்பானவர்களே , உயிர்த்தெழுந்த இயேசு வேதாகமத்தின் மூலம் உங்களுக்குத் தோன்றலாம், நிச்சயமாக தோன்றுவார். நீங்கள் இயேசுவின் வெளிப்பாட்டிற்காக ஜெபித்து, வேதவாக்கியங்களைப் படிக்கவோ அல்லது சிந்திக்கவோ ஆரம்பிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்துவார்.அது மிகுந்த பாக்கியமான அனுபவமாக இருக்கும்!  அல்லேலூயா!!ஆமென் 🙏.

மனக்கண்கள் திறக்கப்பட்டு ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள், உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள் !

17-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள் !

14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.(யோவான் 20:14-15 )NKJV.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மகதலேனா மரியாளுக்கு அவரது தோற்றம் ஆச்சரியமாக தோன்றியது.இயேசு சிலுவையில் இறப்பதற்கு முன்பு மரியாள் அவரை நன்கு அறிந்திருந்தாள் .ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு எந்த வடிவத்திலும் தோன்றலாம்,நாம் எதிர்பாராத தோற்றத்திலும் காட்சியளிக்கலாம். இன்று இயேசுவை நாம் ஆவிக்குரிய ரீதியில் பகுத்தறியவேண்டும் என்பதை நமக்குப் புரிய வைப்பதற்காக அவர் ஒரு தோட்டக்காரனைப் போல மரியாளுக்குத் தோன்றினார்.கடவுள் இயற்கை சூழலை விட ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஐந்து இயற்கை புலன்களின் உணர்வுகளை விட ஆவிக்குரிய உணர்வுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.எனவே நாம் பார்வையால் காண்கின்ற காரியங்களை அல்ல, விசுவாசத்தினால் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஆம் என் அன்பானவர்களே ,நமக்குள் எப்போதும் விழிப்புடனும் ,உற்சாகத்துடனும் இருக்கும் ஆவிக்குரிய உணர்வுகளை நாம் தட்டி எழுப்பி விசுவாசத்தில் நடக்கவும், மனக்கண்கள் திறக்கப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவை இன்று காணவும் அழைக்கப்படுகிறோம். நம்முடைய இயற்கையான புலன்களுக்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம், ஆனாலும் மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றாதபடிக்கு, ஆவியில் நடக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (கலாத்தியர் 5:16) ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள், அவருடைய வாக்குறுதியை இப்போது அனுபவியுங்கள்!

14-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள், அவருடைய வாக்குறுதியை இப்போது அனுபவியுங்கள்!

தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.அப்போஸ்தலர் 2:16 NKJV

பேதுருவும் மற்ற விசுவாசிகளும் (அவர்களில் சுமார் 120 பேர்), பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கனவாகவும்,ஏக்கமாகவும் கொண்டு இருந்த பரிசுத்த ஆவியை இப்போது பெற்றனர். “பெந்தெகொஸ்தே” என்று அழைக்கப்படும் அந்நாளில் கிறிஸ்துவின் சபை (CHURCH ) தோன்றியது.

அப்போதிருந்து, பரிசுத்த விசுவாசிகள் “தேவாலயம்” என்றும் அழைக்கப்பட்டார்கள்.அந்த விசுவாசிகள், ஆதி காலத்தின் தொடக்கத்திலிருந்து தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவருடன் ஒத்துழைக்க அழைக்கப்பட்டார்கள் . 

ஆம் என் அன்பானவர்களே ! கிறிஸ்து இயேசுவில் கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று நிறைவேற்றப்படுவதற்கு எந்த நிபந்தனையும் நமக்கு இல்லை.ஆகவே,உங்கள் அதிசயம் இன்றே. உங்களுக்கு மிகவும் அநுக்ரகமான நேரம் இப்போதே (NOW ). 
கிறிஸ்து இயேசுவில் நாம் தேவனுடைய நீதி என்று ஒப்புக்கொண்டு அவர் திரும்ப வர காத்திருக்கையில் மறுசீரமைப்பு/ இழந்தவைகளை திரும்பி பெறுதல் ஆகியவற்றை பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையில் செய்ய நம் சிந்தை அவரோடு ஒன்றிணைய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும்!ஆமென் 🙏.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள், அவருடைய வாக்குறுதியை இப்போது அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள், உங்கள் அனுக்கிரகக் காலத்தை இப்போதே அனுபவியுங்கள் !

13-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள், உங்கள் அனுக்கிரகக் காலத்தை இப்போதே அனுபவியுங்கள் !

1. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
II கொரிந்தியர் 6:1-2 (NKJV)

நாம் இனி தேவனிடமிருந்து எதையும் பெற காத்திருக்கவில்லை. மாறாக ,கடவுள் ஏற்கனவே எல்லாவற்றையும் வழங்கியுள்ளார் என்று விசுவாசத்தோடு பெற்றுக்கொள்கிறோம் . நம்முடைய பாவத்திற்காக அவர் பாவமாக மாறினார் அப்படியே அவருடைய நீதியால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம் இது இன்றைய வேத பகுதிக்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது .

கடவுள் ஏற்கனவே நம்மை நீதிமான்களாக ஆக்கிவிட்டார் என்பதை நாம் புரிந்துகொண்டு, அவர் நம்முடைய நீதி என்று ஒப்புக்கொள்ளும்போது, ​​அவருடைய தயவை நாம் பெற்றுக்கொள்கிறோம் மற்றும் அனுக்கிரக காலத்தில் இப்போதே (NOW ) அடையாளங்களையும், அற்புதங்களையும் அனுபவிக்கிறோம் .

ஏசாயா 49:8 வசனத்தில் வாக்குறுதியயாக கூறப்பட்டது நிறைவேறும் நாள் இப்போதே(NOW) என்று அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள் காட்டுகிறார் .ஆம் என் அன்பனவர்களே, உங்கள் ஆசீர்வாதம் இன்று! உங்கள் அதிசயம் இப்போதே (NOW ) !

இயேசுவே உங்கள் நீதி என்றும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து அறிக்கை செய்யுங்கள். உங்கள் அதிசயத்தைப் பெற உங்கள் மனதை ஒருங்கிணைத்து எதிர்ப்பாகும்போது இப்போதே (NOW ) தேவ கிருபை உங்கள் வாழ்வில் நிஜமாகிறது . அல்லேலூயா !!!ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,உங்கள் அனுக்கிரகக் காலத்தை இப்போதே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.