14-04-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதா தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்குக் கொடுத்ததன் நோக்கத்தை அறிவது நம்மை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது!
“அவர்கள் பனை மரங்களின் கிளைகளை எடுத்துக்கொண்டு, அவரைச் சந்திக்கப் புறப்பட்டு, ‘ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்! இஸ்ரவேலின் ராஜாவே!’ என்று கூப்பிட்டார்கள்”— யோவான் 12:13 (NKJV)
உயிர்த்தெழுதழுந்த ஞாயிறுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக பாரம்பரியமாக அனுசரிக்கப்படுகிறது,இது, புனித வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது – ஆம் இது இயேசுவின் அன்பின் ஆழத்தையும் அவரது இறுதி தியாகத்தின் வல்லமையையும் வெளிப்படுத்தும் ஒரு புனிதமான வாரம். இது எருசலேமுக்குள் அவர் வெற்றிகரமாக நுழைந்ததையும், துன்பத்தின் வழியாக அவர் மேற்கொண்ட பயணத்தின் தொடக்கத்தையும் நினைவுகூர்கிறது – தலைமுறை தலைமுறையாக மனிதகுலத்தை சிறைபிடித்திருந்த அடிமைத்தனமான பாவம், நோய், சுயம், சாபம் மற்றும் மரணம் ஆகியவற்றின் மீது அவர் பெற்ற வெற்றியில் முடிகிறது.
“எங்களை இரட்சியும்” என்று பொருள்படும் ஓசன்னாவின் கூக்குரல் யுகங்களாக எதிரொலித்தது. அதற்குப் பிரதிபலிப்பாக, இயேசு, கிருபையால் நிறைந்தவராக, பரலோகத்திலிருந்து இறங்கி, சிலுவையின் பயங்கர மரணத்திற்குக் தன்னைத் தாழ்த்தி மரித்து, நம்மை அவரோடு நித்திய ஜீவனுக்குள் உயர்த்த மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
அன்பானவர்களே, நித்திய அன்புடன் உங்களை நேசிக்கும் இயேசு கிறிஸ்து, உங்கள் வாழ்க்கையில் ஒரு தெய்வீக உயர்த்தலைக் கொண்டுவர இப்போதும் உழைத்து வருகிறார். ஆகவே, உறுதியாக இருங்கள்!
இந்த வாரம், பரலோகம் உங்கள் சூழ்நிலைகளை ஆக்கிரமிக்கட்டும், உங்கள் பரலோகப் பிதாவின் மகிமை உங்களைச் சூழ்ந்து கொள்ளட்டும் – இயேசுவின் தியாகத்தின் விளைவாக, ராஜாக்களுக்கு ராஜாவுடன் பரலோக இடங்களில் அமர உங்களை ஆழத்திலிருந்து உயர்த்துகிறது. ஆமென்🙏
நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!