02-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்ளாகவும்,ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யுங்கள்!
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.வெளிப்படுத்துதல் 5:10 NKJV
உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வாதமான செப்டம்பர் மாத வாழ்த்துக்கள்!
என் அன்பானவர்களே, இந்த செப்டம்பர் மாதம் இரண்டு பெரிய வாக்குறுதிகளுடன் உதயமாகிறது:
1.இந்த மாதம் உங்களுக்கு மாபெரும் மறுமலர்ச்சியின் (REVIVAL)மாதமாக இருக்கும்!
2.இந்த மாதம் உங்களுக்கு தடைகள் திடீரென்று நிர்மூலமாகும் மாதமாக இருக்கும்!
தேவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் அற்புதமான வெளிப்பாடுகளையும் அவருடைய தனிப்பட்ட மற்றும் சிறப்புப் பொக்கிஷமான பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகளையும் வழங்குவார்.
இந்த இரண்டு நபர்களும் மிகவும் நுணுக்கமாக வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்களின் செயல்பாட்டில் மிகவும் பிரிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்,உங்கள் எதிரியின் ஒவ்வொரு திட்டம் மற்றும் ஆயுதங்களையும் முற்றிலுமாக தகர்த்தெறிகிறார்கள்.மேலும்,எதிரிகளின் அழுக்கு தந்திரங்களை நீங்கள் தேடினாலும்,உங்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் அழிக்கிறார்கள்.
இரண்டாவதாக, இந்த வெளிப்பாட்டின் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியை அனுபவிப்பீர்கள் – அது “திடீரென்று நடக்கும்”.
ஆம் என் அன்பானவர்களே,குறிப்பாக இந்த மூன்று பகுதிகளில் திடீர் முன்னேற்றங்களை அனுபவிக்க தயாராகுங்கள்:
A) தெய்வீக ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையில் திடீர் பெலன் மற்றும் எழுச்சி பெறுவீர்கள்.
B) உங்கள் வாழ்வில் திடீரென்று செல்வ செழிப்படைவீர்கள்.
C) இயற்கைக்கு அப்பாற்பட்ட பரலோக பாதுகாப்பு பெறுவீர்கள்.
என் அன்பானவர்களே, இந்த மூன்று பகுதிகளையும் நான் பட்டியலிட்டிருந்தாலும், திடீர் முன்னேற்றம் உங்கள் வாழ்க்கையின் பிற பகுதிகளான தொழில், கல்வி, வணிகம், தொழில், குடும்பம், ஊழியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஜெப வாழ்க்கை (கடவுளுடனான உறவு) மற்றும் வேதப்பூர்வ தியானங்கள் (தேவனின் வெளிப்பாடுகள்) ஆகிய பகுதிகளில் மறுமலர்ச்சி அடைவீர்கள். அல்லேலூயா!
நான் இதைப் பற்றி நினைக்கும் பொழுது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாயிருக்கிறீகள்!
நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு ராஜா மற்றும் பிரதான ஆசாரியாராக,பூமியில் ஆட்சி செய்ய நியமிக்கப்பட்டுள்ளீர்கள்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்ளாகவும்,ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யும் அனுபவத்தைப் பெறுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!