மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, என்றென்றும் ஆட்சி செய்வதற்கான திறவுகோல்களைப் பெறுங்கள்!

09-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, என்றென்றும் ஆட்சி செய்வதற்கான திறவுகோல்களைப் பெறுங்கள்!

22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; ரோமர்கள் 3:22-24

“எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமைக்குக் குறைவுபட்டார்கள்” . என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது நமது கடந்த கால வரலாறு.
எவ்வாறாயினும், நாம் அறிந்திருக்க வேண்டியதும்,நம்புவதும் நமது தற்போதைய நிலைப்பாட்டைத்தான்.ஆம் தேவன் உங்களை இப்போது நீதிமான்களாகவே பார்க்கிறார். இயேசு கிறிஸ்து மூலம் பாவங்களின் தண்டனையிலிருந்து உங்களை விடுவித்து, அவர் உங்களை அவருடைய பார்வையில் நீதிமான்களாக மாற்றினார்.

என் பிரியமானவர்களே, தேவனுடைய நீதியானது உங்களுக்குத் தகுதியானதைக் கொடாமால். மாறாக, உங்களுக்கு தகுதியில்லாததைப் பெறுவதே தேவனின் நீதியாகும். நாம் அனைவரும் பாவம் செய்ததால், பாவத்தின் சம்பளம் மரணம்தான் நமக்குத் தகுதியானது என்று வசனம் கூறுகிறது (ரோமர் 3:23 மற்றும் 6:23).ஆனால், நமக்கு தகுதி இல்லாத அவருடைய கிருபையை பெறுவதாகும்.அதுவே நம் எல்லா பாவங்களையும் மன்னித்து அவருடைய பார்வையில் நம்மை நீதிமானாக பார்க்கச்செய்கிறது.

நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்பது,கடந்த காலத்தில் செய்த மற்றும் எதிர்காலத்தில் செய்யப்போகும் என் எல்லா பாவங்களையும் தேவன் என்னிலிருந்து எடுத்து,அவற்றையெல்லாம் இயேசுவின் மீது வைத்து,என் இடத்தில் அவரைத் தண்டித்தார் என்பதாகும். ஒருபோதும் பாவம் செய்யாத இயேசு,தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிதலுடன் வாழ்ந்தார்.அதனிமித்தம் அவருக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஆசீர்வாதங்களையும் நம்மீது வைத்தார்.
இந்த கிருபையானது உங்களுக்கும் எனக்கும் தகுதியற்றது,நிபந்தனையற்றது மற்றும் வரம்பற்றது. அல்லேலூயா!

அப்படியானால், தேவனின் நீதி என்பது அவருடைய ஈவு,சம்பாதிக்க வேண்டிய வெகுமதி அல்ல அதைபெற்றுக்கொள்ளவேண்டும். அதன்மூலம் வாழ்க்கையில் ஆட்சி செய்யுங்கள். இதுவே நமக்கு தேவையான ராஜ்யத்தின் திறவுகோல்.

என் அன்பானவர்களே, அவருடைய கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியின் பரிசையும் வெறுமனே விசுவாசித்து மற்றும் பெறுங்கள். இன்று உங்கள் ஆசீர்வாதத்தின் நாள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆட்சி செய்வதற்கான திறவுகோல்களைப் பெறுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *