11-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் சிந்தையை புதுப்பிக்க அவரை அனுமதியுங்கள்!
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6:10 NKJV.
1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.ரோமர் 12:1 NKJV
வாழ்க்கைப் போராட்டங்கள் நடைமுறையில் தோல்வியடைவதற்கு அல்லது வெற்றிபெறுவதற்கு முன்பு அவை மனதில் வெற்றி பெறுகின்றன அல்லது இழக்கப்படுகின்றன.
மனிதர்கள் படைக்கப்பட்ட போது தேவன் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார் (ஆதியாகமம் 1:28). இருப்பினும்*முதல் பெற்றோர்களான ஆதாமும் ஏவாளும் இந்த உலகத்தை ஆளக் கொடுத்த ஆளுமையை இழந்தனர்*.
“உமது ராஜ்யம் வருவதாக” என்பது நம்மை மீட்டெடுக்க தேவனிடம் ஏறெடுக்கும் முதன்மையான ஜெபமாக இருக்கிறது. இந்த ஜெபத்தின் மூலம், பல ஆண்டுகளாக பலவீனமாயிருந்த உங்கள் புத்தி, உங்கள் உணர்ச்சி மற்றும் உங்கள் விருப்பத்தை தேவன் மீட்டெடுக்கிறார்.
குற்றஉணர்வு கொண்ட மனநிலை,அடிமைத்தனம்-மனநிலை,செய்ய முடியாது,வெற்றிபெற முடியாது-என்ற மனநிலை மற்றும் இது போன்ற சில சிந்தையால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். “உமது ராஜ்யம் வருவதாக” என்பது நம் மனநிலையை மாற்ற தேவனின் தலையீட்டை கோருவதாகும்.
நான் நினைக்கும் விதத்தை மாற்ற சுயமாக முயற்சித்தால்,நான் மிகக் குறைவான வெற்றியையே காணலாம், ஆனால், என் மனநிலையை மாற்ற தேவன் அனுமதித்தால், மாற்றம் நிரந்தரமாகவும் நித்தியமாகவும் இருக்கும். இதன் மூலம் அவருடைய ராஜ்யம் நமக்குள் வந்திருக்கிறது (மத்தேயு 17:21) என்று அர்த்தமாகிறது. அல்லேலூயா!
எனவே,என் அன்பானவர்களே உங்கள் உடலை தேவனுக்கு ஒரு உயிருள்ள தியாகமாக முன்வைத்து, அவருடைய ராஜ்யம் உங்கள் ஆத்துமாவில் வந்து செயல்பட அனுமதியுங்கள்,நிச்சயமாக நீங்கள் ஆச்சரியமான முடிவுகளைக் காண்பீர்கள். அவருடைய வாக்குறுதிகள் ஒருபோதும் வீண்போகாது. உங்கள் சமகாலத்தவர்கள் அனைவரையும் தாண்டி, எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். இந்த நாளில் உன்னத பரலோகத்தில் மாட்சிமையுடன் அமர்ந்திருக்க புழுதியிலிருந்து நீங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள். ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவ நீதி என்று உள்நோக்கத்துடன் செய்யும் உங்கள் ஒப்புதல் விசுவாச அறிக்கை உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிஜமாக்குகிறது!
பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!