14-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
12.நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். I கொரிந்தியர் 2:12 NKJV
உலகத்தின் ஆவி நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறது,ஆனால்,தேவனுடைய ஆவியானவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்தவற்றின் நிமித்தம் அவருடைய நீதியின் படியாக உங்களுக்குச் சரியானதைச் செய்ய பெலன் தந்து உதவுகிறார்.
உங்கள் செயல்திறன் உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை உலகத்தின் ஆவி சொல்லும்,ஆனால் கல்வாரி சிலுவையில் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் காரணமாக,தேவனின் ஆவியானவர் நீங்கள் இப்போது இருக்கும் உயர்ந்த நிலையை உங்களுக்கு சுட்டிக் காட்டி உறுதியளிக்கிறார்.
உலகத்தின் ஆவி உங்களுக்கு பற்றாக்குறை மற்றும் கோரிக்கைகளை முன் வைக்கும்,அது தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும், ஆனால் தேவனின் ஆவியானவர் உங்களுக்கு தேவனின் மிகுதியையும்,மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை விளைவிக்கும் இணையற்ற வளங்களையும் காட்டுவார்.
உலகின் ஆவி எப்போதும் உங்கள் செயல்திறனையே சார்ந்திருக்கும்,ஏனெனில் எதுவும் இலவசமாக வராது, எல்லாமே விலைக் குறியுடன் தான் வருகிறது மற்றும் அதில் எப்போதும் மறைக்கப்பட்ட செலவுக் காரணிஉள்ளடக்கியிருக்கும்.ஆனால், தேவன் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்ததை நீங்கள் அனுபவிக்கும்படி தேவனின் ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார்.
ஆம் என் அன்பானவர்களே, உலகத்தின் ஆவியும், தேவனின் ஆவியும் எதிரும் புதிருமாக இருக்கும்.மன அழுத்தம் இல்லாத, கவலையற்ற, கடனற்ற, நோயற்ற மேலும் கண்டனம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்குக் காட்டி உதவுகிறார்.
அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவரை உங்கள் வாழ்வில் அனுமதியுங்கள்!! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்.ஏனென்றால், இயேசு ஏற்கனவே முழுமையாக உங்களுக்கு பதிலாக கிரையம் செலுத்திவிட்டார்.
ஆம்! இது நமக்கு இலவசம் ஆனால் அது தேவனுக்கு செலவாகும். மேலும், நீங்கள் அவரை உள்ளே அழைக்கும் போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வதிக்கப்படுகிறார். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை நற்செய்தி பேராலயம் !!