ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை ) நமக்காகப் பாவமாக்கினார்.II கொரிந்தியர் 5:21

என் அன்பானவர்களே, உயிர்த்தெழுதல் ஒரு நிகழ்வு மட்டுமல்ல,அது ஒரு அற்புத அனுபவம். இருப்பினும், சிலுவையின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது மட்டுமே உயிர்த்தெழுதலை அனுபவிக்க முடியும்.
சிலுவை தியாகத்தின் மூன்று முக்கிய நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, உங்களையும் என்னையும் நீதிமான்களாக்கிய சிலுவையின் முதல் மற்றும் தலையான நோக்கத்தைப் பார்ப்போம்.

அந்த நேரத்தில் சிலுவையின் மீது ஒரு தெய்வீக பரிமாற்றம் நடந்தது.
சர்வவல்லமையுள்ள ஒரே உண்மையான கடவுள், நம்முடைய பாவங்கள், வியாதிகள், துக்கங்கள், குற்றங்கள் மற்றும் கண்டனங்கள் அனைத்தையும் எடுத்து இயேசுவின் உடலில் வைத்தார். இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். மறுபுறம், கடவுள் இயேசுவில் இருந்த நீதியின் உண்மையான தன்மையை எடுத்து, இயேசு இருந்ததைப் போலவே, நம்மை முழுமையாக நீதிமான்களாக்க அதை நம்மீது வைத்தார். அல்லேலூயா!

இதை நீங்கள் விசுவாசித்து, அவருடைய நீதியை அன்பளிப்பாக பெற்று, ஒப்புக்கொள்ளும்போது, “இயேசு என் பாவத்தையும், பாவத்தின் விளைவுகளையும், அதற்கான நியாயத்தீர்ப்பையும் தம்முடைய சரீரத்தில் ஏற்றுக்கொண்டதால்,நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன் என்று அறிக்கையிடுவீர்கள். அப்போது, நீங்கள் உண்மையிலேயே அவருடைய உயிர்த்தெழுதலை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் அனுபவிப்பீர்கள். ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  ×  5  =  45