ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

05-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
ஜான் 6:51 NKJV.

மேற்கண்ட வசனத்தின் பொருள் என்னவென்றால் ,நமக்கு கொடுக்க ஆண்டவராகிய இயேசுவிடம் அப்பம் இருக்கிறது என்பதல்ல,மாறாக அவரே பரலோகத்திலிருந்து வந்த அப்பமாக இருக்கிறார். பழம் தாவரத்தின் உண்ணும் பகுதியாக இருப்பது போலவே, இயேசுவும்,எல்லையற்ற கடவுளை நாம் புரிந்து கொள்ளும் பகுதியாக இருக்கிறார்.அல்லேலூயா!

இயேசுஆதியில் இருந்த வார்த்தையாக அவதாரமாகி பூமிக்கு வந்தார் .பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை மனித வடிவமாக மாற்றியது போல் (வார்த்தை மாம்சமாக மாறியது), நாம் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது அந்த அப்பமானது ,கடவுளின் தீராத ஆற்றல் மூலமாக அனைத்து இயற்கை விதிகளையும் மீறி மனிதனை நித்திய ஜீவனாக மாற்றுகிறது .  இப்படித்தான் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வெறும் தண்ணீரை மனிதகுலம் இதுவரை ருசித்திராத, உடனடி( instantaneous) அற்புதமான, இனிமையான திராட்சரசமாக மாற்றினார்.

என் அன்பானவர்களே , இராப்போஜனத்தில் பங்கு பெரும்போது இயேசுவில் பங்குகொண்டு , அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் .  அது ஒரு ரொட்டித் துண்டாகத் தோன்றினாலும்,அவரில் பங்கு கொள்ளும்போது சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாவல்லமையை உங்களில் செயலாற்றி உங்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் .! ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  1  =  2