ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய அளவிட முடியாத அன்பின் ஆழத்தை அனுபவியுங்கள் !

07-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய அளவிட முடியாத அன்பின் ஆழத்தை அனுபவியுங்கள் !

நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக்கா 23:41-43) NKJV

 

ஆசீர்வதிக்கப்பட்ட புனித வெள்ளி வாழ்த்துக்கள் என் அன்பு நண்பர்களே !
இந்தப் வேதாகமத்தின் பகுதியை நான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும்போது, ​​அவருடைய அன்பைக் கண்டு வியந்து என் கண்களில் கண்ணீர் வழிகிறது!

இந்த குற்றவாளி,தனக்கு தகுதியான தண்டனையை அனுபவித்தார் , ஏனென்றால் அவரே ஒப்புக்கொள்கிறார், தன் செயல்களுக்கு ஏற்ற தண்டனையை தான் பெற்றதாக .
ஆனால், தேவனுடைய ராஜ்யத்தின் நீதி மன்றத்தில், மரணத்தின் நிலையிலும் இரக்கம் எப்போதும் இருக்கிறது,ஏனெனில் அந்த குற்றவாளி சிலுவையில் மரிக்கும்போது இயேசுவிடம் இப்படியாக விசுவாசமாய் ஜெபிக்கிறார்: “ஆண்டவரே, நீர் உமது ராஜ்யத்திற்கு வரும்போது என்னை நினைவுகூரும். ”.

இந்த குற்றவாளியில் பாராட்டப்படதக்க விசுவாசத்தை நாம் காண்கிறோம். இவருடைய இந்த விசுவாசம் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
காரணம் , இயேசு பூமியில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் கடவுளின் வல்லமை நிறைந்தவராக பல அற்புதங்கள் வெளிப்படுத்திய நேரத்தில் அந்த குற்றவாளிஅவரை காணவில்லை , இயேசு தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நேரத்திலும் அவரைக் காணவில்லை . மாறாக கோர சிலுவையில் தன்னைப்போல தொங்கிக்கொண்டிருந்த நிலையில் எந்த குற்றமும் இல்லாத அவர் தண்டிக்கப்பட்டார் என்று கண்டு விசுவாசித்தான்.இது உண்மையிலேயே ஒரு அற்புதமான விசுவாசம் .

என் அன்பானவர்களே , ஒன்றை நினைவில் வையுங்கள்:
புனித வெள்ளி என்பது கடவுளின் அன்பின் ஆழத்தின் செய்தியாகும், இது மனிதகுலத்தின் மிகக் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவரையும் காப்பாற்றுகிறது, ஏனெனில் அவரது அன்பு மனிதனின் துரோகத்தை விட ஆழமானது.அல்லேலூயா !
அவருடைய அளவிட முடியாத இந்த பெரிய அன்பின் ஆழத்தைப் பெறுவதற்கு உங்களிடமிருந்து “இயேசு” என்ற அற்புத நாமத்தை அறிக்கை செய்வதே போதுமானது . ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய அளவிட முடியாத அன்பின் ஆழத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  ×  9  =  54