28-06-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்!
15.அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.ஓசியா 2:15 NKJV
“ஆகோர்” என்றால் துன்பங்கள்.பள்ளத்தாக்கு என்பது பூமியின் தாழ்வான பகுதி.ஆகோர் பள்ளத்தாக்கு’ என்பதன் பொருளானது மனிதன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பயங்கரமான முறையில் துன்பங்ளினால் மிக மோசமாக தாக்கப்படுவதாகும்.
இருப்பினும்,தேவன் இந்த பிரச்சனைகளை கொண்டு‘நம்பிக்கையின் வாசலை’ உருவாக்கவே பயன்படுத்துகிறார். அவர் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செயல்பட வைக்கிறார்.யாராலும் மூட முடியாத திறந்தவாசலை நான் அமைத்துள்ளேன் என்று அவர் கூறுகிறார்.
பாலைவனத்தில் ஆகாரால் தன் கண் முன்னே இறக்கும் மகனைப் பார்க்க முடியவில்லை, அவன் தனது இறுதி மூச்சை விடுகிற நிலையில் தேவன் காட்சியளித்து, அவளது கண்களைத் திறந்து, ஒரு தண்ணீர்க் கிணற்றைக் காணச்செய்து (ஆதியாகமம் 21:19)இறக்கும் தருவாயில் இருந்த அவளுடைய மகனை காப்பாற்றி ஒரு பெரிய தேசமாக்கினார்.
ஆம் என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில் அவர் “திறந்த வாசல்” உங்களுக்கு உண்டு என்று உறுதியளித்திருக்கிறார், ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் முன்னேற்றத்தைக் காணவில்லையா? அல்லது ஒருவேளை நீங்கள் ஆகோர் பள்ளத்தாக்கை அனுபவிக்கிறீர்களா? திடமனதாய் இருங்கள், மகிழ்ச்சியோடு இருங்கள், தேவன் உங்களை மறக்கவில்லை. அவர் உங்கள் ஆகோரின் நடுவில் “திறந்த வாசல்” அமைத்துள்ளார். உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்களுக்காக தேவன் வைத்திருக்கும் திட்டத்தை இப்போது பார்க்க உங்களுக்கு நிச்சயமாக உதவுவார். ஆமென் ! அவர் திறந்த வாசலால் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் எதிர்காலத்தை இயேசுவின் நாமத்தில் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏
இந்த மாதம் முழுவதும் உங்களையும் என்னையும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அவர் தொடர்ந்து நம்மை வழிநடத்துவார். “இன்று உங்களுக்கான கிருபை” என்ற தியானத்தில் தினமும் என்னுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்பவராகவும்மற்றும் ஆறுதலளிப்பவராகவும் உங்களோடு இருக்கிறார்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!