22-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்!
35.ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
36.நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
37.வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார்,தாமதம்பண்ணார்.எபிரெயர் 10:35-37 NKJV.
தேவனின் சித்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும்,அதன் விளைவாக தேவனின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதின் முக்கியத்தையும் மேற்கண்ட வேத வசனங்களிலிருந்து ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
கர்த்தராகிய இயேசு ஏற்கனவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிவிட்டு,எல்லாம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு,உன்னதமான மாட்சிமையின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பதால்,நாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதே நம் முன் உள்ள கேள்வி?
அவர் சிலுவை மரணத்தின் மூலமாக என் எல்லா பாவங்களையும் என்றென்றும் மன்னித்துவிட்டார்,ஏனென்றால்,“இனி அவர்களின் பாவங்களை நான் நினைவில் கொள்ளமாட்டேன்” என்று அவர் கூறினார்.அவர் தம்முடைய இரத்தத்தினாலே என்னை என்றென்றும் நீதிமானாக்கினார், ஆகையால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1).அவர் என்னை என்றென்றும் ஆசீர்வதித்தார்,இயேசு உங்களுக்கும் எனக்கும் இந்த ஆசீர்வாதங்களை நிரந்தரமாக அருளினார்,அதை அவர் திரும்பப் பெறமாட்டார்.மேலும் உங்களையும் என்னையும் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் நீதிமான்களாகவும் நிலைநிறுத்தினார்!
இருப்பினும், நிலைப்பாட்டில் (POSITIONALLY ) உங்களுடையது நடைமுறையில் (PRACTICALLY) உங்களுடையதாகவும் மாற வேண்டும். பரலோகத்தில் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களுடனும் அவர் உங்களை ஆசீர்வதித்துள்ளார் (எபேசியர் 1:3) இப்போது பூலோகத்திலும் அது வெளிப்பட வேண்டும்.
பரிசுத்த ஆவியானவரே எல்லா ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்துபவர் (1 கொரிந்தியர் 12:7).
அவருடனான நமது ஒத்துழைப்பு (தனிப்பட்ட உறவு)மற்றும்,அவருடைய தெய்வீக வழியை நம் வாழ்வில் அனுமதிப்பது என்பது (வாழ்க்கையை அவரிடம் விட்டுக் கொடுப்பதே) தேவனின் சித்தம்.அவர் இயேசுவுக்கு உண்டான எல்லாவற்றிலிருந்தும் எடுத்து உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார் (யோவான் 16:14).அவர் தனது வார்த்தைகளை உங்கள் மனதிலும் இதயத்திலும் மீண்டும் எழுதுவார்.அவர் நம் சிந்தனையை ஆட்கொண்டவுடன்,தேவனுக்கு நன்றி சொல்வது தானாகவே நம்மிலிருந்து வரும்.
என் பிரியமானவர்களே,உங்களில் மற்றும் உங்கள் மூலமாக வேலை செய்ய அவரை அனுமதியுங்கள்.
இயேசுவின் அனைத்தையும் வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ள கிறிஸ்துவாக இருக்கிறார்!அல்லேலூயா!ஆமென்🙏. .
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!