மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

29-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:17-19NKJV

இந்த ஜெபம் முழு வேதத்திலும் உள்ள மிகவும் அற்புதமான பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்த ஜெபத்தை ஒருவர் வாஞ்சையோடு ஜெபித்தால், அவனது வாழ்க்கை ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்காது. இதுவே சத்தியம்!

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நான்கு முக்கியமான பகுதிகளை அப்போஸ்தலனாகிய பவுல் கவனம் செலுத்துகிறார்:
1.ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிய ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியைப் பெற வேண்டும்.
2. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் அவனது வாழ்வில் தேவனின் அழைப்பை அறிந்து கொள்ள ஒளியூட்டப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அவருடைய அழைப்பைப் பற்றிய இந்த புரிதல் கிறிஸ்துவில் உங்கள் உண்மையான அடையாளத்தையும் (IDENTITY) உங்கள் வாழ்க்கையில் தேவனின் இலக்கையும் (DESTINY ) தெளிவாக வரையறுக்கும்.
3. இந்த உலகில் உங்களுக்காக மகிமையான மற்றும் தனித்துவமாக வைக்கக்கப்பட்ட தேவனின் ஆஸ்தியை அறிய ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் ஒளிர வேண்டும்.
4. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் மிகவும் பிரகாசமாக ஒளிமயமாக இருக்கும் போது, அவன் தேவனின் ஒப்பற்ற மற்றும் அற்புதமான வல்லமை(DUNAMIS POWER) தன்னில் செயல்படுவதை அறிந்துகொள்கிறான். இந்தப் புரிதல் எந்த மனிதனையும் பூஜ்ஜியத்திலிருந்து வெற்றியாளனாக மாற்றும். அது நிச்சயம்! இதுவே உன்னதமான துனாமிஸ் சக்தி (DUNAMIS POWER). அது உங்களை சேற்று களிமண்ணிலிருந்து உன்னதத்தில் மாட்சிமையுடன் அமர வைக்கிறது.

ஆம் என் அன்பானவர்களே, இந்த ஜெபத்தை உங்கள் தனிஜெபமாக விசுவாசத்தோடு ஏறெடுங்கள்.அப்பொழுது ,நீங்கள் நிச்சயமாக ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்க மாட்டீர்கள். அது “முட்கள் நிறைந்த” வாழ்க்கையிலிருந்து மகிமையின் ராஜாவுடன் “சிம்மாசனத்தில்” அமர்ந்திருக்கும் வாழ்க்கைக்கு உங்களை உயர்த்தும்!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9  ×    =  27