Category: Tamil

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

04-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:1,2 NKJV‬‬

கிறிஸ்துவோடும், கிறிஸ்துவுக்குள்ளுமான உங்கள் நிலைப்பாடு (POSITION) பாதுகாப்பானது மற்றும் நிரந்தரமானது,அதேசமயம் தற்போது இருக்கும் உங்கள் நிலை தற்காலிகமானது மற்றும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஏனென்றால் உங்கள் தற்போதைய நிலை உங்கள் உணர்வுகள்,உண்மைகள் அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீங்கள் செய்ததின் பிரதிபலன்.
ஆனால்,தேவனோடு அல்லது தேவனில் உங்கள் நிலைப்பாடு முற்றிலும் கிறிஸ்து உங்களுக்காகச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் உணர்வு மற்றும் உண்மையை சார்ந்தது அல்ல.ஏனென்றால் தேவன் எப்போதும் கிறிஸ்துவில் உங்களைக் காண்கிறார்.

தேவன் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஒருநாளும் மாற்றுவதில்லை. உங்களுக்காகவே இவ்வுலகில் வந்து,உங்களுக்காகவே மரித்து,உங்களுக்காகவே அடக்கம் செய்யப்பட்டபடியால் இயேசுவின் நிமித்தம் தேவன் எப்போதும் உங்களைப் பற்றி நல்லதையே நினைக்கிறார்,உங்களைப் பற்றி நன்மையானவைகளையே பேசுகிறார்,எப்போதும் உங்களுக்குச் சிறந்ததையே செய்கிறார். அவர் உங்களுக்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மேலும் அவர் உங்களை தன்னோடு கூட இடங்களில் பிதாவின் வலது பாரிசத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார்.

எனவே, உங்கள் தற்போதைய சூழ் நிலையை (POSITION)ஐ வைத்து உங்கள் நிலையை மதிப்பிடாதீர்கள்,ஆனால் எப்போதும் உங்கள் தற்போதைய நிலையை அவரோடு நிற்க்கும் நிலையை (POSITION)வைத்து மதிப்பிடுங்கள்.
உங்கள் தற்போதைய நிலையை உண்மையானதாக மாற்றும் சவால்கள் வரும்போது, மிகுதியானகிருபையையும், நீதியின் பரிசையும் பெற்றுக்கொண்டு ,அதை வாய்மொழியாக அறிக்கையிடுங்கள்,அப்போது நீங்கள் பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுவீர்கள். அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிறுவப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

img_134

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

03-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

இதோ ஒரு அழகான வாக்குறுதி வசனம்,
உங்கள் கடந்த காலத்தையும் கிறிஸ்துவில் உங்கள் தற்போதைய நிலைப்பாட்டையும் வேறுபடுத்துகிறது
அல்லது
கடந்த காலத்தில் யாரோ ஒருவர் அளித்த தீர்ப்பு பிழையின் விளைவாக ஏற்பட்ட உங்கள் பரிதாபகரமான தற்போதைய நிலைக்கும்,இயேசுவின் நிமித்தம் தேவன் உங்களுக்கு அளித்த உங்கள் தற்போதைய நிலைப்பாட்டிற்கும் இது முரண்பாட்டை விவரிக்கிறது.

ஆம் என் அன்பானவர்களே,கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளுக்கு பலியாகி இருக்கலாம் அல்லது மூதாதையரின்,பெற்றோரின் தீய செயலினாலோ அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் மோசமான பொருளாதார நிலையினாலோ அல்லது கடந்த காலத்தின் பிற துன்பங்களினாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், ஜாதி, கலாச்சாரம், நிறம், மதம், சமூகம், நாடு அல்லது கண்டம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்,எல்லா மக்களும் (நீங்களும் நானும் உட்பட) நீதிமான்களாக மாற வேண்டும் என்பதற்காக,இயேசு கிறிஸ்து பாவமாகவும், சாபமாகவும் மாறினார். அவருடைய தியாகத்தின் நிமித்தம் தேவனின் பார்வையில் நாம் என்றென்றும் நீதியுள்ளவர்களாக பார்க்கப்படுகிறோம் மற்றும் நம்மை விட்டு நீங்க முடியாத ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்!

உங்கள் தற்போதைய நிலை தற்காலிகமானது,அது எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் ஆனால் உங்கள் நிலைப்பாடு – அதாவது கிறிஸ்து மற்றும் கிறிஸ்துவுடனான உங்கள் நிலை பாதுகாப்பானது . அது நித்தியமானது யாராலும் மாற்ற முடியாதது.

உங்கள் கசப்பான கடந்த கால அல்லது பரிதாபகரமான தற்போதைய நிலையை தேவன் ஏற்கனவே உங்களுக்கு வைத்த ஒரு அற்புதமான நிகழ்கால நிலைக்கு மாற்றுவதற்கு நீங்கள் அவருடைய பரிபூரண கிருபையையும் நீதியின் பரிசையும் பெற்றுக்கொள்ளவேண்டும்

நான் செய்ய வேண்டியதெல்லாம் “கிருபையின் மிகுதியையும் நீதியின் வரத்தையும் பெறுகிறேன்,நான் ஆளுகை செய்கிறேன்”என்று கூறி தொடர்ந்து கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.அப்போது,நம்மை கடன் ஆள முடியாது,மரணம் ஆள முடியாது, நோய் ஆள முடியாது,மனச்சோர்வு ஆள முடியாது,தோல்வி ஆள முடியாது,நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆள முடியாது,வறுமை ஆட்சி செய்ய முடியாது,ஆனால் கிருபையின் மிகுதியால் நான்ஆளுகை செய்வேன் மற்றும் இயேசுவின் நாமத்தில் நீதியின் பரிசால் ஆளுகை செய்கிறேன்.!” ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

02-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17 NKJV‬‬

மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜூலை மாத வாழ்த்துக்கள்!

இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவன் ஒரு “மிகுதியான ஆசீர்வாதத்தை”கட்டளையிட்டுள்ளார்.

ஆம்,கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் அவருடைய “மிகுதியான ஆசீர்வாதங்களைத்” பெற்றுத்தருகிற மாதம். இந்த 2024 -ஆண்டின் பிற்பகுதியானது முதல் பாதியை விட
அதிக மகிமையையும் சிறப்பையும் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் தனது பின்மாரி மழையை -பரிசுத்த ஆவியானவரை பொழிகிறார்!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் “பெற்றுக்கொள்ளுவது” மட்டுமே. ஆம்,இந்த மாதத்தில் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.கடந்த காலத்தில் நீங்கள் துக்கங்கள், தோல்விகள்,ஏமாற்றங்கள், துரோகங்கள் மற்றும் பலவற்றைப் பெற்றிருக்கலாம். ஆனால், இப்போது அலைகளின் திசை மாறிவிட்டன. அவருடைய கிருபை உங்களைத் தேடி வருகிறது.அவருடைய சாதகமான தீர்ப்புகள் உங்களை நியாயப்படுத்தும்.அவருடைய கிருபைகள் உங்கள் மேல் வேகமாக பரவும்,அதனால் நீங்கள் பரலோகத்தில் உள்ள உங்கள் அப்பா தேவனிடம்,”ஏன் என்னை இவ்வளவாக ஆசீர்வதிக்கிறீர்கள்” ? என்று நன்றியின் கண்ணீரோடு கேட்கும்படியாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியலிருந்தும் பெற்றுக்கொண்டு, அதை ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு நாளில் பலமுறை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.அப்படி செய்யும் போது நீங்கள் நிச்சயமாக இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_151

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

28-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

15.அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.ஓசியா 2:15 NKJV

“ஆகோர்” என்றால் துன்பங்கள்.பள்ளத்தாக்கு என்பது பூமியின் தாழ்வான பகுதி.ஆகோர் பள்ளத்தாக்கு’ என்பதன் பொருளானது மனிதன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பயங்கரமான முறையில் துன்பங்ளினால் மிக மோசமாக தாக்கப்படுவதாகும்.

இருப்பினும்,தேவன் இந்த பிரச்சனைகளை கொண்டு‘நம்பிக்கையின் வாசலை’ உருவாக்கவே பயன்படுத்துகிறார். அவர் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செயல்பட வைக்கிறார்.யாராலும் மூட முடியாத திறந்தவாசலை நான் அமைத்துள்ளேன் என்று அவர் கூறுகிறார்.

பாலைவனத்தில் ஆகாரால் தன் கண் முன்னே இறக்கும் மகனைப் பார்க்க முடியவில்லை, அவன் தனது இறுதி மூச்சை விடுகிற நிலையில் தேவன் காட்சியளித்து, அவளது கண்களைத் திறந்து, ஒரு தண்ணீர்க் கிணற்றைக் காணச்செய்து (ஆதியாகமம் 21:19)இறக்கும் தருவாயில் இருந்த அவளுடைய மகனை காப்பாற்றி ஒரு பெரிய தேசமாக்கினார்.

ஆம் என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில் அவர் “திறந்த வாசல்” உங்களுக்கு உண்டு என்று உறுதியளித்திருக்கிறார், ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் முன்னேற்றத்தைக் காணவில்லையா? அல்லது ஒருவேளை நீங்கள் ஆகோர் பள்ளத்தாக்கை அனுபவிக்கிறீர்களா? திடமனதாய் இருங்கள், மகிழ்ச்சியோடு இருங்கள், தேவன் உங்களை மறக்கவில்லை. அவர் உங்கள் ஆகோரின் நடுவில் “திறந்த வாசல்” அமைத்துள்ளார். உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்களுக்காக தேவன் வைத்திருக்கும் திட்டத்தை இப்போது பார்க்க உங்களுக்கு நிச்சயமாக உதவுவார். ஆமென் ! அவர் திறந்த வாசலால் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் எதிர்காலத்தை இயேசுவின் நாமத்தில் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

இந்த மாதம் முழுவதும் உங்களையும் என்னையும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அவர் தொடர்ந்து நம்மை வழிநடத்துவார். “இன்று உங்களுக்கான கிருபை” என்ற தியானத்தில் தினமும் என்னுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்பவராகவும்மற்றும் ஆறுதலளிப்பவராகவும் உங்களோடு இருக்கிறார்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_152

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

27-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

1.ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2.கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV

பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கை என்பது பூமியில் உள்ள வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் ஆளுகை செய்ய வைக்கும் வாழ்க்கை முறையாக விளங்குகிறது.

குற்றவுணர்வு என்பது மனித குலத்திற்கு தலையாய எதிரியாக இருக்கிறது.ஆனால், கிறிஸ்துவின் மரணமானது-உங்களுடைய குற்ற உணர்வை தூண்டக்கூடிய பாவத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தின் விளைவான மரணத்தையும் அழித்த ஒரே மாற்று மருந்தாக இருக்கிறது.

சிலுவையில் இயேசு கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் என்ன செய்தார் என்பதை நிஜமாக்கவே பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் வருகிறார்.

அனைத்து மனிதகுலத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால் ,தேவன் இயேசுவின் உடலில் பாவத்தை நியாயந்தீர்த்தார் மற்றும் அதன் விளைவாக அனைத்து மனிதர்களுடைய பாவங்கள் நிவிர்த்தியாக்கப்பட்டு இயேசுவின் மூலம் விடுதலை பெற்றனர் என்று அறிவிப்பதாகும்.

இயேசுவின் தியாக மரணத்தை இப்போது விசுவாசிக்கும் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால்,தேவன் பாவத்தை நியாயந்தீர்த்து, இந்த விசுவாசிகளை என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தார் என்று தெளிவுபடுத்துவதாகும்.
பரிசுத்த ஆவியின் ஊழியம், முழு மனித இனத்தின் வாழ்விலும் இந்த அழிவை ஏற்படுத்திய பிசாசின் மீது கடவுளின் நியாயதீர்ப்பை வெளிப்படுத்துவதாகும்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே, இன்று தேவனின் இறுதி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது.ஆகவே நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள், என்றென்றும் ஆளுகை செய்வீர்கள், அவருடைய இறுதி தீர்ப்பை மாற்றியமைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியிருக்கிறீர்கள்!
உங்களில் கிறிஸ்து” என்பது உங்களில் வசிக்கும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கையாகும்.. உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய ஆளுகையை அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களை குற்றப்படுத்த முடியாத வாழ்வை அனுபவியுங்கள்!

26-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களை குற்றப்படுத்த முடியாத வாழ்வை அனுபவியுங்கள்!

1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV

மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி குற்றப்படுத்துதல். இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா நோய்களுக்கும்,பயத்திற்கும்,மரணத்திற்கும் குற்றப்படுத்துதல் தான் மூல காரணம்.

குற்றப்படுத்துதலின் வரையறை என்பது மிகவும் வலுவான மறுப்பின் வெளிப்பாடாகும் குற்றப்படுத்தலி லிருந்து யாரும் தப்பமுடியவில்லை. ஒவ்வொருவரும் குற்றப்படுத்துதலை எதிர்கொள்கிறார்கள்,பலர் அதற்கு பின்விளைவுகளான நோய், மனச்சோர்வு,சீக்கிரத்தில் முதுமை அடைவது மற்றும் அகால மரணம் போன்ற கொடிய விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு, அவர் கல்வாரி சிலுவையில் இறக்கவிருந்தபோது, அவர் அனுபவித்த மிகக் கொடூரமான குற்றப்படுத்தல் என்னவென்றால், தேவன் அவரைக் கைவிட்ட தருணமாகும். எல்லா மனித இனமும் முழுவதுமாக குற்றப்படுத்துதலிலிருந்து விடுபட இயேசு இதை சந்தித்தார். அல்லேலூயா!

ஆம் என் அன்பு நண்பர்களே, இன்று இயேசுவின்நிமித்தம் நமக்கு குற்றஉணர்வு இல்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றப்படுத்துதலிலிருந்தும் விடுவிக்கிறார்.
அவர் ஜீவ ஆவியானவராயிருக்கிறார்! நீங்கள் தற்போது எந்த வகையான குற்றஉணர்வுகளை எதிர்கொண்டாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றஉணர்வுகளிலிலிருந்தும் முழுமையாக விடுவித்து, உங்கள் மகிழ்ச்சியையும், இளமையையும் அடையச்செய்கிறார், மற்றும் அவர் உங்கள் இழப்புகளையும், ஆரோக்கியம், செல்வம், புகழ், பதவி, வீடு, வணிகம் ஆகியவற்றின் தோல்வியிலிருந்து விடுவித்து அனைத்து வீணான ஆண்டுகளையும் மீட்டுக் கொடுக்கிறார் க்கிறார். ஆமென் 🙏

பரிசுத்த ஆவியானவரே, நான் உங்களை என் நண்பராக முழுமனதோடு அழைக்கிறேன்.கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக மாற்றியதற்க்கு நன்றி. எனது அனைத்து இழப்புகளையும் மீட்டமைத்ததற்கு நன்றி.நான் உங்களது முழுமையான மன்னிப்பைப் பெற்று,என்னுள் கிறிஸ்துவில் உள்ள ஜீவ ஆவியின் பிரமாணத்தின் செயல்பாட்டை கைப்பற்றிக்கொள்ள உங்களை அனுமதிக்கிறேன். ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_166

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

25-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள்,அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். லூக்கா 11:9,11-13 NKJV.

இது பிரார்த்தனை பற்றிய பரிசுத்த வேதாகமத்தின் மிகவும் பிரபலமான பகுதியாகும்,இங்கு நீங்கள் தேவனிடம் உரிமையோடு கேட்கவும்,தேடவும் மற்றும் தட்டவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நிறைய தேவைகள் உள்ளன மற்றும் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதபோது நாம் பிரார்த்தனை செய்கிறோம்.அதாவது ,தேவனிடம் உரிமையோடு கேட்கவும், தேடவும், கதவை தட்டவும் வேண்டும் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இதுவே வெற்றிகரமான பிரார்த்தனையின் மந்திரத்தை (முறை அல்லது சூத்திரம்) வைத்திருந்தாலும்,நம்முடைய பிரார்த்தனைகளுக்கு இன்னும் பதில் கிடைக்காதபோது பல நேரங்களில் நாம் இதயம் தளர்வடைகிறது.ஒருவேளை அது தேவனின் சித்தமல்ல என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளுகிறோம்.

ஆனால், வெற்றிகரமான பிரார்த்தனைக்கான உண்மையான திறவுகோல் மேலே உள்ள பகுதியில் தெளிவாக காணப்படுகிறது.ஒவ்வொரு முறையும் நாம் எந்த தேவைக்காக ஜெபிக்கும் போதும்,தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர் தாமே. இந்த மகத்தான மற்றும் அற்புதமான உண்மையின் வெளிப்பாட்டை எனது விலைமதிப்பற்ற மனைவி மூலம் நான் புரிந்துகொண்டேன்.

ஆம் என் அன்பு நண்பர்களே, நீங்கள் எந்த தேவைக்காகவும் ஜெபிக்கும்போது, தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர்தாமே .தேவன் தாமே எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லா இடங்களிலும் இருக்கிறவர்,மற்றும் சர்வ வல்லமை நிறைந்தவர் அதற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர் தாமே.
பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் வாழ்வில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார். அவர் ஆன்மீக விஷயங்களை இயற்கையில் உண்மையாக்குகிறார். அவர் பரலோகத்தில் முடிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் பூமியில் வெளிப்படுத்துகிறார். அல்லேலூயா!

ஆகவே, பரிசுத்த ஆவியானவரை உங்கள் நண்பராக இருக்க இன்றே அவரை அழைக்கவும்,உங்கள் வாழ்க்கையில் அவருடைய வெளிப்பாட்டை மகிமையாக அனுபவிக்கவும். ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_167

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

24-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
லூக்கா 24:49 NKJV.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு பிதாவின் வாக்குறுதியாயிருக்கிறார்! பரிசுத்த வேதாகமத்தில் தேவன் நமக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் மற்ற எல்லா வாக்குறுதிகளை விட மேலான வாக்குறுதி.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவரை விட மிகவும் பிரியமானதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனின் சிறந்த மற்றும் சொந்த பொக்கிஷமாயிருக்கிறார்!
பழைய ஏற்பாட்டின் நாட்களில் தேவனுடன் பயணித்த அனைத்து தேவமனிதர்களும்,பிதா மற்றும் குமாரன் இருவராலும் பெரிதும் நேசிக்கப்படும் மிகவும் அன்பான நபர் பரிசுத்த ஆவியானவர் என்ற இந்த பெரிய அற்புதமான உண்மையை தெளிவாக புரிந்து கொண்டிருந்தனர்.

என் அன்பானவர்களே, இந்த பிதாவின் வாக்குறுதியை உங்கள் சொந்த நண்பராகப் பெறும்போது,நீங்கள் தெய்வீகமானவராக,நித்தியமானவராக,அழியாதவராக ,மற்றும் மேற்கொள்ள முடியாதவராக அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! ஆமென் 🙏

இந்த வாரம் ஜூன் மாதத்தின் இறுதி வாரமாகும், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் வாக்களிக்கப்பட்ட”யாராலும் மூட முடியாத திறந்த வாசல்”நடைமுறைப்படுத்தப்படுவதை நீங்கள் காண வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

21-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.யோவான் 16:13-14 NKJV.

பரிசுத்த ஆவியானவருடன் வாழ்கின்ற வாழ்க்கை ஒரு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் பரிபூரண வாழ்க்கை.அது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை.அது தேவனின் வாழ்க்கை மேலும் வாழ்வில் ஆளுகை செய்யும் வாழ்க்கை!
அப்போது,நீங்கள் ஒரு வெற்றியாளர் மட்டுமல்ல,ஒரு வெற்றியாளரை விட மேலானவராயிருக்கிறீர்கள். (ரோமர் 8:37).

பரிசுத்த ஆவியானவரை உங்களில் வசிப்பவராக இருக்க அனுமதிப்பது அவருடைய நித்திய ஜீவனை உங்களில் செயல்பட அனுமதிப்பதாகும்.
பரிசுத்த ஆவியானவரை உங்கள் தலைவராக இருக்க அனுமதிப்பது, எல்லாவற்றிலும்,எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், உங்களை எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்து விளங்கச் செய்வதாகும். அல்லேலூயா!

பரிசுத்த ஆவிக்கு சரணடைவது இயேசு கிறிஸ்துவை நம்மில் மகிமைப்படுத்துகிறது மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கும் அவருடைய நியாயப்பிரமணத்திற்கும் இயேசு முழுமையாகக் கீழ்ப்படிவதால் இயேசுவுக்குத் தகுதியான அனைத்தையும் நான் அனுபவிக்க வழிவகுக்கிறது .

என் அன்பான நண்பர்களே, இயேசு கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் தகுதியான தண்டனை( பாவத்தின் சம்பளம்) அனைத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டு உயிர் தியாகம் செய்ததால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தகுதியான அனைத்தையும் நாம் உரிமையோடு பெற்றுக்கொள்ளலாம்.
பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இதை உங்கள் வாழ்க்கையில் நிகழச் செய்ய முடியும் – இதுவே தெய்வீக பரிமாற்றம்!அவர் உங்கள் நண்பராக இருக்க விரும்புகிறார்,ஆம்,சிறந்த நண்பராக!
இன்று அவரை உங்கள் வாழ்க்கைக்கு வரவேர்ப்பீர்களா?

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதியாயிருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு வெற்றியாளரை விட மேலானவர் !! பரிசுத்த ஆவியை உங்களில் வரவேர்த்ததினால் நீங்கள் என்றென்றும் தெய்வீகமான,நித்தியமான,அழியாத, மற்றும் வெல்லமுடியாதவராயிருக்கிறீர்கள்!!!
உண்மையிலேயே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

19-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் யோவான் 16:7 ‭NKJV‬‬.

4 சுவிசேஷங்களிலும் கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுடன் வாழ்க்கையைப் படிக்கும்போது,கர்த்தராகிய இயேசுவின் பூமிக்குரிய வாசத்தின் போது சீஷர்கள் அவருடன் இருந்த விதம்,அவருடன் இருப்பது எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் என்று நான் பலமுறை எண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஆனால், உண்மை என்னவெனில் (ஆண்டவர் இயேசு கூறியது போல்),உங்கள் வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் பரிசுத்த ஆவியானவர் வருவதற்காக, கர்த்தராகிய இயேசு பரலோகத்திற்குச் சென்றது உங்களுக்கும் எனக்கும் நன்மையே.
ஏன் ?
ஏனென்றால்,கர்த்தராகிய இயேசு மனிதனாக அவதரித்த போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும், ஆனால் இப்போது, கர்த்தராகிய இயேசுவின் ஆவியான பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும்,எல்லாரோடும் இருக்கிறார், ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு எல்லா நேரங்களிலும் குறிப்பாக சேவை செய்கிறார். அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் எல்லையற்றவர் என்று சொல்கிறேன்! அல்லேலூயா!!

மேலும்,கர்த்தராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில்,அவர் சீஷர்களுடன் மனிதனாக வாழ்ந்தார்,ஆனால் இப்போது அதே கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவராக என்னோடு மாத்திரமல்ல எனக்குள்ளும் வாசம்செய்கிறார்.நீங்களும் நானும் பலமுறை தோல்வியுற்றிருந்தாலும் நம்மை விட்டு விலகாமல் அவர் எப்போதும் நம்மில் வாழ்கிறார்.இது உண்மையிலேயே அற்புதமானது மற்றும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது!

மோசேயின்நியாயப்பிரமாணம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தும் ஆனால் எப்படி செய்வது என்று உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தான் உங்களுக்கு உதவமுடியும்.

மோசேயின் நியாயப்பிரமாணம் நீங்கள் எல்லாவற்றயும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பரிபூரண கீழ்ப்படிதலின் நிமித்தம் நியாயப்பிரமாணம் என்ன எதிர்பார்கிறதோ அந்த எதிர்பார்ப்பிற்க்கு அப்பால் செயல்பட கிருபையை (அவரது திறனை) வழங்குகிறார் . இது உங்களுக்கு சாதகமாக இல்லையா? இது உண்மையிலேயே அற்புதம் இல்லையா? ஆம்! இது உண்மையில் நற் செய்தி தான். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!