இன்று உங்களுக்குக்கான கிருபை!
27 ஆகஸ்ட் 2026
நீங்கள் நீதியில் பிறந்திருக்கிறீர்கள்!
வேதவசனம்:
“அதில் தேவநீதியானது விசுவாசத்தினின்று விசுவாசத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறது…”ரோமர் 1:17
கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவநீதி என்பது நமக்குள் இருக்கும் தேவனுடைய சுபாவமாகும். அவருடைய நீதியே தேவனுடைய டி.என்.ஏ (DNA) ஆகும்.
நீங்கள் நீதியை அடைவதற்காக வளரவில்லை; மாறாக, நீங்கள் நீதியில் பிறந்திருக்கிறீர்கள். கிருபை மற்றும் நீதியைப் பற்றிய நற்செய்தியைத் தொடர்ந்து கேட்கும்போது, கிறிஸ்துவினுடைய நீதியைக் குறித்த உங்கள் புரிதல் மட்டுமே வளர்கிறது.
நல்ல நாட்களில் நீங்கள் நீதிமானாகவும், மோசமான நாட்களில் நீதிமானற்றவராகவும் இருப்பதில்லை.
நீதிமானாகிய உங்கள் அடையாளம் கிறிஸ்துவில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜெபம்
அப்பா பிதாவே , கிறிஸ்துவின் மூலமாக நான் நீதியில் பிறந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். கிறிஸ்துவின் நீதியைக் குறித்த வெளிப்பாடு,என்னிலுள்ள குற்ற உணர்வு மற்றும் சுயநீதி சார்ந்த எண்ணங்கள் அனைத்தையும் நீக்கிப்போடட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
விசுவாச அறிக்கை
நான் கிறிஸ்து இயேசுவில் தேவநீதியாக இருக்கிறேன்!
கிறிஸ்துவில் நீதியே என்னுடைய புதிய சுபாவம்.
நீதிமானாக மாறுவதற்கு நான் பிரயாசப்படுவதில்லை; நான் பெற்றுக்கொண்ட நீதியின் அடிப்படையில் வாழ்கிறேன்.
கிறிஸ்துவின் நீதியைக் குறித்த எனது புரிதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆமென் 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
