10-05-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !
ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.(யோவான் 21:7, 10-11) NKJV
கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திகளின் மிக அற்புதமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இயேசுவின் மரணத்தின் காரணமாக சீடர்கள் முற்றிலும் மனச்சோர்வடைந்தனர், ஆனால், கர்த்தர் மீண்டும் உயிர்த்தெழுந்து அவர்களுக்குத் தோன்றியபோது, திடீரென்று அவர்களின் வாழ்க்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாத புத்துணர்வு பெற்றது .
அவர்கள் புதிய வாழ்க்கையைப் பெற்றனர் – தெய்வீக வாழ்க்கை, நித்திய வாழ்க்கை மற்றும் புதிய சிருஷ்டியாக மாறினர் ! எனினும், அவர்களின் புதிய இயல்பின் வல்லமையை – புதிய படைப்பின் உள்ளார்ந்த வல்லமையை அவர்கள் உணரவில்லை. பின்பு உயிர்த்த இயேசு மீண்டும் அவர்களுக்கு வெளிப்பட்டார் .இந்த முறை பேதுரு இதை உணர்ந்த கணத்தில், அவர்களால் கூட்டாக இழுக்க முடியாத பெரிய மீன்கள் நிறைந்த வலையை, பேதுரு மட்டும் தனியாக கரைக்கு இழுத்து வந்தார்.
என் அன்பானவர்களே , நம்மில் பலர் புதிய சிருஷ்டியாக இருந்தாலும், நம்மில் குடியிருக்கும் வல்லமையை – புதிய வல்லமையின் சக்தியை முழுமையாக அறியாதவர்களாகவே இருக்கிறோம். நாம் இன்னும் பலவீனமாக இருக்கிறோம்,நாம் திறமையற்றவர்கள் என்று உணர்கிறோம். நமது உடல் உணர்வுகள் மற்றும் நமது சூழ்நிலைகளால் நாம் நகர்த்தப்படுகிறோம்.
* ஆனால் , உயிர்த்தெழுந்த இரட்சகர் மற்றும் கர்த்தராகிய இயேசுவின் புதிய வெளிப்பாடு மட்டுமே நம்மை புது சிருஷ்டியின் வெற்றி பாதையில் நடத்தும் .கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகிய நீங்கள் யார்?- புது சிருஷ்டியாகிய நீங்கள் ஒரு தெய்வீகமான,நித்தியமான,வெல்ல முடியாத,அழிக்க இயலாத வல்லமையைப் பெறுவீர்கள் இதைக் குறித்த அறிவும்,தொடர்ந்து செய்கிற விசுவாச அறிக்கையே நம்மில் புதிய சிருஷ்டியின் வல்லமையை வெளிப்படுத்தும்.ஆமென்!🙏
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.