இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், நமது வாழ்வின் போராட்டங்களை இப்பொழுதே நிறுத்தும் வல்லமை கொண்ட அவருடைய ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்!

12-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், நமது வாழ்வின் போராட்டங்களை இப்பொழுதே நிறுத்தும் வல்லமை கொண்ட அவருடைய ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்!

29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20:29 )NKJV.

காண்பது விசுவாசத்தை ஏற்படுத்தும் ஆனால் முதலில் விசுவாசித்து பிறகு காண்கிறவர்கள் பாக்கியவான்கள்!
உயிர்த்தெழுந்த இயேசு தோமாவிடம் கூறியது போலவே இந்த ஆசீர்வாதத்தை நாம் பெறும் வரை சத்தியத்திற்கும் ( TRUTH ) ,நிஜத்திற்கும் ( FACT ) இடையே தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 
நிஜத்திற்கு (FACT ) மேலாக சத்தியத்தை (TRUTH -ஐ ) ஊக்குவிக்க நீங்கள் முடிவு செய்யும் போது, ​​நீங்கள் இந்த ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்,மேலும் உங்கள் வாழ்வில் நம்பிக்கையின் போராட்டம் அடங்கிவிடும்! உண்மையில் நீங்கள் பாக்கியவான்களாவீர்கள் !! 
அப்படியானால் சத்தியம் என்றால் என்ன? இயேசு பேசியது மற்றும் அவர் இன்னும் பேசுவது அனைத்தும் சத்தியம் .  அவரே சத்தியம் !
4 உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்! உங்கள் இரட்சகராகவும் இறைவனாகவும் இருக்க அவரை அழைக்கவும்.
சீஷர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்திருக்காது, இருப்பினும் உங்கள் பாவமன்னிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்ற உண்மையை நீங்கள் வெறுமனே நம்பி புதிய சிருஷ்டியானீர்கள் ! 

நிஜ வாழ்க்கையில் , உங்கள் உடல் நிலை இன்னும் குணமடையாமல் இருக்கலாம், நீங்கள் இன்னும் குணமடைய முயல்கிறீர்களா , வலி ​​அதிகமாக உள்ளதா ,நீங்கள் இன்னும் வேதனையில் “இறைவா நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறீர்களா ?. என் பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள், ஆகையால் அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள் என்பது சத்தியம். (1 பேதுரு 2:24). சத்தியத்தை பிடித்துக் கொண்டு, மறுக்க முடியாத நிஜத்துக்கு மேலாக சத்தியத்தை ஊக்குவியுங்கள், உங்கள் போராட்டம் இயேசுவின் நாமத்தில் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும்.

மேலும், ஒவ்வொரு அம்சத்திலும், நிஜ வாழ்க்கையில் நீங்கள் இன்னும் ஆசீர்வாதங்களைப் பார்க்க முடியாத நிலை இருக்கலாம் , மாறாக நீங்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு , போனஸ், உறவுகளை மீண்டும் இணைத்தல் ஆகியவற்றைக் காணாமல் இருக்கலாம் ,இப்பொழுது சத்தியமாகிய இயேசுவைப் பற்றிக் கொண்டு உயிர்த்தெழுந்து, நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்குறீர்கள் :அது தெய்வீகமான, நித்தியமான, எவராலும் வெல்ல முடியாத, அழிக்க முடியாத மற்றும் அழியாத. வாழ்க்கை. அந்த புது சிருஷ்டிக்கு எல்லா நிஜ வாழ்க்கை போராட்டங்களும் தலைவணங்கும். பார்க்காமல் நம்புகிறவர்கள் பாக்கியவான்கள்! இந்த ஆசீர்வாதம் ஒவ்வொரு போராட்டத்தையும் என்றென்றும் நிறுத்தும் சத்தியம் . எப்போதும் வெல்லும்!
இந்த மகிமைக்கு காரணர் இயேசு என்னுடையவர் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், நமது வாழ்வின் போராட்டங்களை இப்பொழுதே நிறுத்தும் வல்லமை கொண்ட அவருடைய ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7  +  2  =