உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

24-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

12. ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.(பிலிப்பியர் 2:12-13)NKJV.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.(எபிரெயர் 4:1) NKJV.

கடவுள் நம்மில் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டது நமது வேலை. *கடவுள் நமக்குள்ளும் நம் மூலமாகவும் செயல்படுவதற்கு பரிசுத்த ஆவியானவருடன் நமது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அவர் செய்து முடித்தார்.அப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?அவரது இரட்சிப்பை முழுமையாக இவ்வாழ்கையில் அனுபவிக்க அழைக்கப்படுகிறோம் இரட்சிப்பு என்றால் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு பாவமும் செய்யாமல்,சாகும்வரை எல்லாவற்றிலும் பிதாவு க்கு முழுமையாக கீழ்ப்படிந்திருந்தார். ஆனாலும், சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தி, பாடனுபவித்து, பாவம், நோய், சாபம், மரணம் ஆகியவற்றிலிருந்து மனுக்குலத்தை மீட்டெடுத்தார். இதுவே இரட்சிப்பு (REDEMPTION).
அவர், “முடிந்தது” என்று கதறினார். அவர் பூமியில் வாழ்ந்ததும்,பாடனுபவித்ததும், மரித்ததும், என் நிலையில் எனக்காக(AS ME & FOR ME) ஆற்றிய இரட்சிப்பின் செயல். இதன் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது இருந்த பிசாசின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நம் அனைவருக்கும் சுகம் ,செல்வாக்கு மற்றும் அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்கு உரித்தாக்கினார் .
அவர் செய்து முடித்த இரட்சிப்பின் வேலை முழுமையும் ,பரிபூரணமும் ஆகும் .அதனோடு கூட்ட வேண்டியது வேறு எதுவும் இல்லை.

ஆகவே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவால் நிறைவு செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டவற்றிலிருந்து இன்று நாம் நமது ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .

நடைமுறையில் நாம் எப்படி இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது ?
சிலுவையில் இயேசு செய்த ஒவ்வொரு மீட்பின் செயலுக்கும், கர்த்தராகிய இயேசுவுக்கும் சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனுக்கும் நன்றி செலுத்துவதன் மூலம், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .
உதாரணமாக,நீங்கள் குணமடையத் தேடுகிறீர்களானால், இயேசுவின் தழும்புகளால் நான் குணமடைந்தேன் என்பதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்.அப்போது, நான் என் சரீரத்தில் அதைப் பார்க்காவிட்டாலும் உணராவிட்டாலும், விசுவாசத்தோடு நன்றி கூறுகிறேன் .
இந்த மனப்பான்மை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்தி, இயேசு ஏற்கனவே செய்ததை இப்போது வெளிப்படுத்துகிறது. அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது என்பதன் பொருள் இதுதான். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  79  =  81