உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

27-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். (எபிரெயர் 10:5, 7, 10) NKJV.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது அவருக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினார்.  கர்த்தராகிய இயேசு தம்மை முழுமையாக தேவனோடு இணைத்து, மனுஷீகத்தை ஏற்று, பூமியில் அவதரித்தார். அவர் பூமியில் வந்தபோது மாம்சத்திற்குரிய பலவீனம், வலி, சோதனை மற்றும் மரணம் ஏற்படக்கூடிய (susceptible) மாம்சத்தில் வெளிப்பட்டார் . பாவத்தின் மீதான கடவுளின் தீர்ப்பை அவர் தனது சொந்த உடலின் மீது ஏற்றுக்கொண்டார். உலகத்தின் சிருஷ்டி முழுவதற்கும் மீட்பைக் கொண்டுவருவதற்காக அவர் தனது உடலை, இரக்கமின்றி அடிக்கவும் ,சிலுவையில் அறையவும் அனுமதித்தார். நம்முடைய பாவங்களைத் துடைத்தழிக்க அவர் தம் விலைமதிப்பற்ற இரத்தத்தையும் சிந்தினார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உண்மையாகவும், நிறைவாகவும் முடித்தார். இதுவே இயேசுவைப் பற்றிய கடவுளின் சித்தம் .

இன்று, நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் கிருபாதார பலியை ஏற்றுக்கொள்வதே நமக்கான தேவனுடைய சித்தம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நம் ஆசீர்வாதத்திற்கு தேவையானதை இயேசு ஏற்கனவே செய்து முடித்தார்,அது முற்றிலும் போதுமானது என்பதை நாம் நம்ப வேண்டும்.

என் அன்பானவர்களே, இந்த வாரம் எல்லாம் வல்ல தேவன் தனது அற்புதமான ஆசீர்வாதங்களையும் அதிசய ங்களையும் உங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார். அது நிச்சயமாக நம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி பிரமிக்கவைக்கும் .இந்த ஆசீர்வாதங்கள் ஏற்கனவே உங்கள் பெயரில் செய்து முடிக்கப்பட்டுள்ளதை நம்புங்கள் அதனிமித்தம் ஆண்டவருக்கு நன்றி மாத்திரம் சொல்லுங்கள் . சொல்லப்படாத, கேட்கப்படாத மற்றும் கற்பனைக்கூட செய்யப்படாத அவருடைய ஆசீர்வாதங்களை இயேசுவின் பெயரில் அனுபவிக்க விசுவாசத்தோடு நன்றி பலி செலுத்துங்கள் .
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ நீதியாயிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  88  =  89