ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

06-04-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

 

 ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

 

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

யாத்திராகமம் 16:15 NKJV.

வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.(யோவான்

6:58 NKJV)

 

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பயணம் செய்தபோது,தேவன் தினமும் வானத்திலிருந்து அப்பத்தை அனுப்பி அவர்களுக்கு உணவளித்தார்.

 

இஸ்ரவேல் மக்கள் எதிர்பார்த்த அப்பம் கடவுள் வழங்கியதிலிருந்து வேறுபட்டதாக இருந்தது . அவர்கள் மோசேயிடம்,“என்ன அது” என்று கேட்டார்கள். “என்ன” என்பது எபிரேய மொழியில் “மன்னா” என்று பொருள் படும். கடவுள் அப்பம் என்று அழைத்தார்,இஸ்ரவேல் மக்கள் ‘மன்னா'( WHAT -என்ன ) என்று அழைத்தார்கள் . அப்போதிருந்தே ,அவர்களால் அதை பரத்திலிருந்து வரும் அப்பமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தக் கருத்து வேறுபாடு தான் பாலும் தேனும் ஓடும் தேசத்தை,கடவுள் ஏற்படுத்திய ஆசீர்வாதமான எதிர்காலத்தை இஸ்ரவேல் புத்திரர் இழக்கச் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் வனாந்தரத்தில் இறந்தும் போனார்கள் .

 

என் அன்பானவர்களே , இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஜீவ அப்பம். இந்த ஜீவ அப்பத்தை விசுவாசத்தினால் உண்பவன் சாகமாட்டான். (ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.- எபிரெயர் 4:2 )ஆமென் 🙏.

 

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

 

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  ×  3  =  21