ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

11-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?(அப்போஸ்தலர் 26:6-8) NKJV.

இறப்பவர்கள் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும் ஒரு காலம் வரும் என்று இஸ்ரவேலின் முன்னோர்களும் அவர்கள் பிள்ளைகளும் கடவுளிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றனர்.

இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பியதன் மூலம் கடவுள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்,ஆண்டவராகிய இயேசு இனி ஒருபோதும் இறக்கமாட்டார்.உலக வரலாற்றில் மரித்தோரிலிருந்து முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டவர் அவர் தான் .ஆனால் யூதர்கள் எதிர்கொண்ட பிரச்சனை என்னவென்றால், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதன் மூலம் கடவுள் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றினார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்கள் இயேசுவைக் கொன்ற குற்றவாளியாக குற்ற உணர்வோடு காட்சியளிப்பார்கள். எனவே, இந்த உயிர்த்தெழுதலின் நற்செய்தியைப் பிரசங்கித்த அப்போஸ்தலன் பவுல் உட்பட இயேசுவை விசுவாசித்த யூதர்களை துன்புறுத்தினார்கள் .

என் அன்பானவர்களே, நற்செய்தி என்னவென்றால், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததால், எல்லா ஆசீர்வாதங்களும் முறையாக என்னுடையவை மற்றும் “இப்போது “(NOW ) அவைகள் நிறைவேற வேண்டும். நான் நாளைக்காகவோ அல்லது எதிர்காலத்தில் சில நாட்களுக்காகவோ காத்திருக்க வேண்டியதில்லை. இது யூத விசுவாசிகளால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் புறஜாதி விசுவாசிகளான நமக்கு, பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே தெளிவாக புரிந்துகொள்ள முடியும் .
நாம் பாவம் செய்ததால் கிறிஸ்து மரித்தது போல், நாம் நீதிமான்களாக்கப்பட்டதால் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் . இதை நாம் விசுவாசித்து, நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்று ஒப்புக்கொண்டு அறிக்கையிடும்பொழுது அவருடைய ,உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கிறேன், அது உடனடியாக என்னை உயிர்ப்பிக்கிறது.
இது
ரோமர் 4:25 இன் உண்மையான விளக்கம்.

 உயிர்த்தெழுதல் என்பது இப்போது என் வாழ்வில் அவரது அற்புதத்தை அனுபவிக்க செய்யும் சகாப்தம்!  ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  1  =  1