ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

03-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

ஜீவ அப்பம் நானே.

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.(ஜான் 6:48, 50) NKJV

பிதாவாகிய தேவன் தடைசெய்யத பழத்தை ஆதாமும்,ஏவாளும் உண்டதால்,முழு மனித இனத்திற்கும் மரணம் தவிர்க்க முடியாததாயிற்று . அதுபோலவே ஜீவ அப்பத்தை உண்பதால், முழு மனித இனத்திற்கும் நித்திய ஜீவன் உண்டாகிறது .

ஏதெனில் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டதால் மனிதன் வெறும் மனிதனாக மாறினான்.மற்றும் தெய்வீக சக்தியை இழக்கவேண்டியதாயிற்று இருப்பினும், இன்று இறைவனின் இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம்.நாம் மீண்டும் இறைவனுடன் ஒன்றி உறவாடி இவ்வுலகில் நித்திய வாசியாக மாறி வெற்றி வாழ்க்கை வாழச்செய்கிறது . அல்லேலூயா!

கர்த்தராகிய இயேசுவின் அன்பானவர்களே,இந்த வாரம் தொடங்கும் போது, ​​அவருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்ள நம்மை அர்ப்பணிப்போம், நாம் தினமும் இருமுறை. இராப்போஜனத்தில்பங்குப்பெற உங்களை அன்புடன் அழைக்கிறேன். இதன் மூலம் கடவுளின் உண்மையான வாழ்க்கையை அனுபவிப்போம். அவர் தம் வார்த்தைக்கு உண்மையுள்ளவர்,ஆகையால் மேற்கூறப்பட்ட வசனத்தின்படி, அவரில் பங்கு கொண்டு நாம் இந்த பூமியில் மரிக்காமல் வாழ்ந்திருப்போம் .

அவருடைய இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், இயேசு உங்கள் மரணத்தை தான் ஏற்று மரித்தார் என்றும் நீங்கள் அவருடைய வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்றும் அறிவிக்கிறீர்கள்.
மேலும் ,அவருடைய இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், அவர் உங்கள் எல்லா நோய்களையும், பாடுகளையும் எடுத்துக்கொண்டார்,ஆகவே அவருடைய தெய்வீக ஆரோக்கியத்தில் நடக்கிறீர்கள் என்றும் அறிவிக்கிறீர்கள். இந்த இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், அவர் உங்கள் எல்லா பாவங்களையும் ,சாபங்களையும் கூட சுமந்தார் என்று அறிவிக்கிறீர்கள், எனவே நீங்கள் இப்போது அவருடைய ஆசீர்வாதத்தில் நடக்கிறீர்கள் .அல்லேலுயா ! ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72  −    =  69